மாடுபிடி வீரருக்கு பறிபோனது கண்

மாடுபிடி வீரருக்கு பறிபோனது கண்

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் 5வது சுற்றின்போது சோழவந்தான் குருவித்துரை ராஜா என்பவர் மாடுபிடிக்க முயன்றார். அப்போது மாடு முட்டியதில், அவரது இடது கண் சேதமடைந்தது. ரத்தம் அதிகளவில் வெளியேறியதால் அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தியுள்ளனர். எனினும் கண் அதிக சேதத்தால், பார்வைப்பாதிப்பு ஏற்படலாம் என்றும் டாக்டர்கள் அச்சம் தெரிவித்தனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy