திருவள்ளுவர் படைப்புகள் மக்களுக்கு வலிமையை வழங்குகின்றன – பிரதமர் மோடி

திருவள்ளுவர் படைப்புகள் மக்களுக்கு வலிமையை வழங்குகின்றன – பிரதமர் மோடி

திருவள்ளுவர் தினமான இன்று, பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் திருவள்ளுவரை வணங்குகிறேன் என தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாட்டப்பட்டு வருகிறது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், திருவள்ளுவர் தினமான இன்றி, பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் திருவள்ளுவரை வணங்குகிறேன் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், திருவள்ளுவர் திருநாளில் அந்த மகானை வணங்குகிறேன். அவரது உன்னத எண்ணங்களும் இலக்கியப் படைப்புக்களும் பல கோடி மக்களுக்கு, இன்றும் வலிமையை வழங்குகின்றன. சமூக நீதி,  சமத்துவம் மற்றும் கருணையை நோக்கி நாம் தொண்டாற்றிட, அவை நம்மை ஊக்குவிக்கின்றன என பதிவிட்டுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan