பாலமேட்டில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவு: 16 மாடுகளை பிடித்து தேரை முதல் பரிசாக பெற்றார் பிரபாகர்

பாலமேட்டில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவு: 16 மாடுகளை பிடித்து தேரை முதல் பரிசாக பெற்றார் பிரபாகர்

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவு பெற்றது. போட்டியில் மொத்தம் 9 சுற்றுகள் நடைபெற்றன. அப்போட்டியில் 625 வீரர்களும், 675 காளைகளும் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. பாலமேடு ஜல்லிக்கட்டில் 16 மாடுகளை பிடித்த பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. ஐயப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராஜா 13 மாடுகளை பிடித்து 2-வது பரிசை பெற்றார். கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் 10 மாடுகளை பிடித்து 3-வது இடம் பிடித்தார்.

பாலமேடு ஜல்லிக்கட்டில் வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் பிடிபடாமல் நின்ற ரமேஷ் என்பவரின் காளைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. காமாட்சிபுரத்தைச் சேர்ந்த ரமேஷூக்கு காங்கேயம் பசுவும், கன்றுக் குட்டியும் பரிசாக வழங்கப்பட்டது. பழங்காநத்தத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் காளைக்கு 2-வது பரிசை பெற்றார். செட்டியபட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் காளைக்கு 3-வது பரிசு வழங்கப்பட்டது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy