குடியரசுத் தினத்தில் தாக்க திட்டம்.. காஷ்மீரில் தீவிரவாதிகள் 5 பேர் கைது.. அசம்பாவிதம் முறியடிப்பு!

குடியரசுத் தினத்தில் தாக்க திட்டம்.. காஷ்மீரில் தீவிரவாதிகள் 5 பேர் கைது.. அசம்பாவிதம் முறியடிப்பு!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தினத்தை முன்னட்டு தீவிரவாதிகள் திட்டமிடப்பட்டு இருந்த பயங்கர தீவிரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 26ம் தேதி நாடு முழுக்க குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ள இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம் சென்னை, டெல்லி, காஷ்மீர், லக்னோ, பெங்களூர்,ஹைதபாராபாத்,கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இந்தியாவில் எடுக்கப்பட்ட சமீபத்திய அரசியல் நடவடிக்கைகள் காரணமாக, தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன காஷ்மீர்

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தினத்தை முன்னட்டு தீவிரவாதிகள் திட்டமிடப்பட்டு இருந்த பயங்கர தீவிரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று காஷ்மீரில் நடந்த ரகசிய ஆப்ரேஷன் ஒன்றில் 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் எல்லோரும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன அடையாளம்

இவர்கள் பெயர் ஜஜாஸ் ஷேக், உமர் ஹமீது, இம்தியாஸ் அஹமது, சாஹில் ப்ரூக், நசீர் அஹமது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் எல்லோரும் காஷ்மீரின் ஹஸ்ரத்பால் பகுதியை சேர்ந்தவர்கள். காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதற்கு எதிராக இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டதாக கூறுகிறார்கள்.

கைது

சரியாக ஜம்மு காஷ்மீர் போலீஸ் அதிகாரி தாவிந்தர் சிங், கைது செய்யப்பட்டதற்கு இடையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் ஸ்ரீநகர் அருகே கைது செய்யப்பட்டனர். போலீசால் பல நாட்களாக தேடப்பட்டு வந்த தீவிரவாதி நவீத் பாபு, இர்பான், ரஃபி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.இவர்களை காரில் அழைத்து சென்ற போதுதான் ஶ்ரீநகர் விமான நிலைய டிஎஸ்பி தாவிந்தர் சிங் கைது செய்யப்பட்டார்.

கட்டுப்பாடு

இன்னொரு பக்கம் ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் மத்திய உள்துறை அமைச்சகம் கட்டுப்பாடுகள் தளர்த்தி வருகிறது. இதற்கு இடையில்தான் இப்படி தீவிரவாத அச்சறுத்தல் ஏற்படும் அச்சம் நிலவி உள்ளது.

[embedded content]


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

Author Image
vikram