குடியரசு தினத்தில் தாக்குதல் நடத்த முயற்சித்த 5 பயங்கரவாதிகள் கைது

குடியரசு தினத்தில் தாக்குதல் நடத்த முயற்சித்த 5 பயங்கரவாதிகள் கைது

ஜம்மு காஷ்மீரில் குடியரசு தினத்தன்று தாக்குதல் நடத்த முற்பட்ட ஜெய்ஷ் இ மொகமது இயக்கத்தை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 பிரிவு நீக்கப்பட்டது. ஆனாலும், பாதுகாப்புப் படையினர் பணியில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் ஹஸ்ரத்பால் பகுதியில் உள்ளூர் போலீசார் இன்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த 5 பயங்கரவாதிகள் சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், கைது செய்யப்பட்டவர்கள் ஜெய்ஷ் இ மொகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் குடியரசு தினத்தன்று பயங்கர தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.

அவர்கள் ஹசரத்பால் பகுதியை சேர்ந்த அஜிஸ் அகமது ஷேக், உமர் ஹமீத் , இம்தியாஸ் அகமது , ஷாகீல் பரூக், நசீர் அகமது ஆகியோர் என தெரிய வந்தது.

பயங்கரவாதிகளிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள், வெடிபொருட்கள், ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள், சாட்டிலைட் போன்கள், போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன என போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan