மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதல்வர்

மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதல்வர்

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் இரண்டு அவதூறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை:

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் செயல்பாடுகளை, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் ஒரு திருமண விழாவில் பேசும்போதுகூட, அரசை விமர்சனம் செய்தார். தமிழக அரசுக்கு சிறந்த நல்லாட்சி விருது கொடுத்தவரை அடிக்க வேண்டும் என்று அவர் ஆக்ரோஷமாக பேசினார். 

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில், மு.க.ஸ்டாலினுக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வழக்கறிஞர் கவுரி அசோகன் 2 மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.

அதில், தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறாக பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் மு.க.ஸ்டாலினை தண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan