தொடர்ந்து லவ் கொடுமை செய்த ஆண்..!  பக்கவா பிளான் பண்ணி ஆசிட் வீசிய பெண்..!

தொடர்ந்து லவ் கொடுமை செய்த ஆண்..! பக்கவா பிளான் பண்ணி ஆசிட் வீசிய பெண்..!

தொடர்ந்து லவ் டார்ச்சர் செய்த ஆண்..!  பக்கவா பிளான் பண்ணி ஆசிட் வீசிய பெண்..! 

தனக்கு தொடர்ந்து லவ் டார்ச்சர்  செய்து ஒரு தலை காதல் செய்து வந்த ஒரு ஆண் மீது, அப்பெண் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் அருகே உள்ளது பவானி கஞ்ச் என்ற இடம். ரோஹித் யாதவ் என்ற 24 வயது  இளைஞர் அதே பகுதியை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை பல நாட்களாக தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார்.

அந்த நபரை பலமுறை எச்சரித்தும் மீண்டும் மீண்டும் அப்பெண்ணை தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் எப்படி சொல்லியும் கேட்காததால் கோபப்பட்ட அப்பெண் தன்னைப் பின் தொடர்ந்து வந்த ஆண் மீது ஆசிட் வீசி உள்ளார். இதன்பிறகு உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டு உள்ள நிலையில் அவரை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அப்பெண் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் தன்னை ஒரு தலைபட்சமாக காதலித்து தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்த நபர் மீது ஒரு பெண் ஆசிட்  வீசிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: AsianetTamil

Author Image
Kundralan M