Press "Enter" to skip to content

ஒரே கல்லில் 2 மாங்காய்…! இது தெரிந்தால் நீங்கள் ஏன் இப்படி இருக்க போறீங்க..!

ஒரே கல்லில் 2 மாங்காய்…! இது தெரிந்தால்  நீங்கள் ஏன் இப்படி இருக்க போறீங்க..! 

பெண்கள் குடும்பத்தையும்…வேலையையும் சமாளிப்பது எப்படின்னு தெரிஞ்சிக்க இத படிங்க….

ஒரு பக்கம் அலுவலக வேலை. இன்னொரு பக்கம் கணவர், குழந்தை, குடும்பம். இன்றைய பெண்களுக்கு வீடு, அலுவலகம் என இரண்டையும் சமாளித்து பேலன்ஸ் செய்ய வேண்டிய நிலையுள்ளது. இதனால் ஏற்படும் மன அழுத்தம் அவர்களின் ஆரோக்கியத்தை அச்சுறுத்துகிறது.

தினமும் நீண்ட தூரப் பயணம், இரவு திரும்ப நெடுநேரம் ஆவதால், வீட்டில் சமைக்க முடியாமல் ஹோட்டலில் சாப்பாடு என இன்றைய வாழ்க்கை முறை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது. 

உடல், ஆரோக்கியத்துக்கென பெண்கள் எந்த முயற்சியும் எடுப்பது இல்லை. 24 மணி நேரத்தில் கொஞ்சமே கொஞ்சம் நேரம் அதற்கென ஒதுக்கினால், உடலுக்கும் மனதுக்கும் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். ஆனால் அதற்கு கூட நேரம் இல்லாமல் காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு ஓடுகிறார்கள். 

 68% இந்திய வேலைக்குச் செல்லும் பெண்கள் வாழ்வியல் நோய்களான மன நிலைக் கலக்கம், பயம், இயல்பாக இருக்கமுடியாமை, வீடு, அலுவலக டென்ஷன், உறவுகளை சரிவர பராமரிக்க முடியாமை, பணியிடச் சுமைகளைச் சமாளிக்க இயலாமை, வீட்டிலிருப்போரிடமிருந்தும், அலுவலகத்தில் உள்ளோரிடமிருந்தும் விலகிப்போதல் போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். 

பெண்களே பெரிய பொறுப்பான அலுவலகங்களின் உயரிய வேலையையும், கணவன், குழந்தைகள் என்ற  குடும்பத்தின் பொறுப்புக்களையும் சுமக்கும்போது ஏற்படும் மனவியல் அழுத்தங்கள் இன்றைய பெண்கள் முன் உள்ள மிகப்பெரிய சவால். இதன் வெளிப்பாடாக பெண்களுக்கு உடல் சோர்வு, தூக்கமின்மை சின்னச் சின்ன விசயங்களிலெல்லாம் எரிச்சல் படுதல் , உடல் வலி , மனச்சோர்வு , குற்ற மனப்பான்மை, இறப்பைப் பற்றிய சிந்தனை, தற்கொலை எண்ணங்கள் ஏற்படுகிறது. சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பதால் வேலைக்கு போகும் பெண்களுக்கு வைட்டமின் டி குறைபாடு அதிகமாக உள்ளது. 

வேலையை திட்டமிடுங்கள் :

எந்த வேலை உடனடியாக செய்யப்பட வேண்டியது என்பதை தீர்மானம் செய்து கொள்ளுங்கள்.

காலையில் குளித்ததும் பிரஷ்சாக காபியை அருந்தத் தொடங்கும்போதே இன்றைய வேலைகள் உங்கள் மனதில் எட்டிப் பார்க்கத் தொடங்கி விட வேண்டும்.

காலையில் பார்த்தே ஆக வேண்டிய வேலைகளை தெளிவான திட்டமிடலோடு செய்யத்தொடங்கி விட வேண்டும். இரவில் படுக்கைக்கு போனதும் இன்றைய வேலைகளை எல்லாம் ஒருகணம் மனதில் கொண்டு வர வேண்டும். 

பிரச்னைகளைத் தவிர்க்க…

பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நடக்கலாம். ஆனால் அதனைத் துணிச்சலோடு எதிர்க்கும் குணத்தை பெண்களிடம் உருவாக்க வேண்டும் வேலை செய்யும் இடத்தில் குடும்ப பிரச்சனைகளை அனைவரிடத்திலும் சொல்வது நமக்கு நாமே தேடிக்கொள்ளும் வினை.

காலை உணவு  என்ன தேவை என்பதை இரவே திட்டமிட வேண்டும். இல்லையென்றால் காலை நேர பதற்றத்திற்கு ஆளாக நேரும். வீட்டு வேலைகளை கணவனின் உதவியை நாடலாம்.

வேலைக்கு போகும் பெண்கள், ஆரோக்கியமாக இருக்க …

உங்களுக்கு பொருந்தக்கூடிய சில உடற்பயிற்சிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை 20 நிமிடங்களுக்கு தசை வலுவூட்டும் பயிற்சிகள் சிலவற்றை செய்வது நல்லது.

தினமும் 3 லிட்டா தண்ணீர் குடிக்க வேண்டியது முக்கியம். இதனால் உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகள் வெளியேறும்.

முடியலையே எனப் புலம்பிக் கொண்டாவது,எல்லா வேலைகளையும் முடித்து விடும் பலருக்கு தெரிவதில்லை, அது மன அழுத்தத்தின் ஆரம்பம் என்பது. 

வீடு, வேலை என, இரண்டுக்கும் 50:50 முக்கியத்துவம் கொடுக்க பழகுங்கள். நிதான மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். 

வேலையை, திறமைக்கான ஒரு வடிகாலாக பாருங்கள். இதற்காக வேலை, வேலை என எந்நேரமும், அதைப் பற்றிய சிந்தனையில் ஓட தேவையில்லை. 

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, டைம் மேனேஜ்மெண்ட் அவசியம். உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு, அக்கம் பக்கத்து வீட்டாருக்கு, எத்தனை மணித்துளிகளை ஒதுக்கலாம் எனத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். பேஸ்புக்கோ, ட்விட்டரோ, டிவியோ, வேலைக்குச் செல்கிறவர்களின் களைப்பை நீக்கி புத்துணர்வு கொடுக்கும் ஒரு விஷயமாக இருக்க வேண்டுமே தவிர, உலகத்தை மறக்கும் அளவுக்கு, அதிலேயே மூழ்கக்கூடாது. 

ஆரோக்கியத்தின் ஆணிவேரே குடும்பத்தினருடன் கழிப்பதுதான்.  வாரத்தில் ஒரு நாள், குடும்பத்தினருடன் சேர்ந்து வெளியில் செல்வது, வீட்டில் எல்லோருமாக கூடிப் பேசி இளம்வயதில் நடந்த விஷயங்களைப் பகிர்ந்து வாய்விட்டுச் சிரிக்கலாம். அழுத்தத்தை விரட்டும் அருமருந்தும் ஆரோக்கியத்தின் அச்சாணியும் அதுதான்.

வேலை செய்யும் இடத்தில் கூடியவரை வம்பு பேசுவதோ, அரசியல் பேசுவதோ வேண்டாம். சிலவிதமான அலுவலக அரசியல்கள், மன அழுத்தத்தை அதிகரித்து, ஒரு கட்டத்தில், அந்த வேலையிலிருந்தே விலகி ஓடச் செய்து விடும். வேலையிடத்தில் செலவழிக்கிற நேரத்தை, ஆக்கப்பூர்வமாக செலவழித்தால், வேலை நேரம் முடிந்தும், அலுவலை முடிக்க முடியாமல் உண்டாகிற, டென்ஷன் இருக்காது. இதை புரிந்து கொண்டு, வீட்டையும், வேலை பார்க்கும் தளத்துக்கான முக்கியத்துவத்தையும் எடை போட்டு பிரித்தாள தெரிந்தவர்களுக்கு, எத்தகைய பிரச்னைகளில் இருந்தும் விடுபட, வழி கிடைக்கும்.

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »