பாகிஸ்தானில் இந்து கோவிலை சேதப்படுத்திய 4 சிறுவர்கள் கைது

பாகிஸ்தானில் இந்து கோவிலை சேதப்படுத்திய 4 சிறுவர்கள் கைது

பாகிஸ்தானில் இந்து கோவில் உண்டியலில் உள்ள பணத்தை திருடுவதற்காக கோவிலை சேதப்படுத்தியது தொடர்பாக 4 சிறுவர்களை போலீகார் கைது செய்தனர்.

கராச்சி:

பாகிஸ்தானில் சிந்து மாகாணம், சாக்ரோ பகுதியில் உள்ள ஒரு இந்து கோவில் மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட 4 சிறுவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். கோவில் உண்டியலில் உள்ள பணத்தை திருடுவதற்காக கோவிலை சேதப்படுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், கோவிலை சேதப்படுத்தியவர்கள் ‘தெய்வ நிந்தனை’ செய்ததாகக்கூறி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி சிந்து மாகாண சிறுபான்மை துறை மந்திரி அரிராம் லால் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

“சாக்ரோ அமைதிக்கு பெயர் பெற்ற நகரமாகும். இங்கு சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து மத கலவரத்தை தூண்டும் முயற்சியில் சில சமூக விரோதிகள் ஈடுபட்டு உள்ளனர். இந்து மக்களை அதிர்ச்சியடையச் செய்யும் இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்றும் அவர் சொன்னார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan