குடிபோதையில் வாகனம் ஓட்டிய டிரைவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்

குடிபோதையில் வாகனம் ஓட்டிய டிரைவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்

அவினாசியில் முதன் முறையாக குடிபோதையில் வாகனம் ஓட்டிய டிரைவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அவினாசி:

திருப்பூர் மாவட்டம் அவினாசி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சதாசிவம் மற்றும் போலீசார் அவினாசி அருகே உள்ள ரங்கா நகர் ரவுண்டானாவில் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சரக்கு வேன் ஓட்டி வந்த அவினாசியை சேர்ந்த விஜயராஜ் என்பவர் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்தது தெரிய வந்தது.

அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் வேன் டிரைவர் விஜயராஜை அவினாசி ஜே.எம். கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு விபிசி, டிரைவர் விஜயராஜூக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தார். அதன் படி டிரைவர் ரூ. 10 ஆயிரத்தை கோர்ட்டில் செலுத்தி வாகனத்தை ஓட்டி சென்றார்.

அவினாசியில் முதன் முறையாக குடிபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan