பொள்ளாச்சி அருகே புலி கடித்து கால்நடைகள் பலி..: உரிய இழப்பீடு தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை

பொள்ளாச்சி அருகே புலி கடித்து கால்நடைகள் பலி..: உரிய இழப்பீடு தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ஒரு கன்று குட்டி உட்பட 5 ஆட்டு குட்டிகளை புலி கடித்து கொன்றதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சர்கார் பகுதியை சேர்ந்த விவசாயி சங்கர் என்பவரது தோட்டத்தில் அதிகாலை நேரத்தில் புலி ஒன்று அங்கு இருந்த கால்நடைகளை கடித்து கொன்றுள்ளது. இதில் தோட்டத்தில் இருந்த 5 ஆட்டு குட்டிகளும், ஒரு கன்று குட்டியும் உயிரிழந்துள்ளது.

அதனை அடுத்து கால்நடைகள் சத்தம் கேட்டு தோட்டத்திற்கு வந்த தோட்ட தொழிலாளி புலி ஒன்று தப்பி சென்றதை கண்டு அச்சத்தில் பின் வாங்கியுள்ளார். புலியின் கால்தடத்தை பதிவு செய்த வனத்துறையினர், அந்த இடத்தில் 6 ஆட்டோமேட்டிக் கேமராவை பொருத்தி புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.இதற்கு இடையில் புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். புலி கடித்து கொன்ற கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயி சங்கர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy