19 வயது பெண்ணை.. நாசம் செய்து.. துணியை திணித்து.. கொடூர சித்திரவதை.. 52 வயது நபர் வெறிச்செயல்

19 வயது பெண்ணை.. நாசம் செய்து.. துணியை திணித்து.. கொடூர சித்திரவதை.. 52 வயது நபர் வெறிச்செயல்

நாக்பூர்: ஒரே வீட்டில் தங்கியிருந்த இளம்பெண்ணை.. நாசம் செய்ததுடன்.. வாயில் துணியை திணித்து.. இரும்பு கம்பியை பிறப்புறுப்பில் சொருகி.. சித்ரவதை செய்துள்ளார் 52 வயது காம மிருகம்.. அவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஒரு நூற்பாலையில் சூப்பர் வைசராக வேலை பார்ப்பவர் யோகிலால் ரஹங்கதாலே… 52 வயதாகிறது.

ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வந்தார்.. இவருடன் வேலை செய்யும் இளைஞரும் அதே வீட்டில்தான் உள்ளார். இந்த வீட்டிற்கு அந்த இளைஞரின் 19 வயது தங்கையும், உறவுக்கார பெண்ணும் வந்திருந்தனர்.

கடந்த 21ம் தேதியன்று இளைஞன் அந்த உறவுக்கார பெண்ணை சொந்த ஊரில் அழைத்து சென்றுவிட போயிருந்தார். அப்போது, 52 வயது யோகிலாலும், 19 வயது இளம்பெண்ணும் மட்டும் தனியாக இருந்தனர். அப்போதுதான் யோகிலால், தன் வேலையை காட்டிஉள்ளார்.. பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.. அதிர்ச்சியடைந்த அந்த பெண் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

image“வள்ளி” பட ரஜினி மாதிரி இருக்காரே.. மனுஷனுக்கு என்னா ஒரு தன்மானம்.. ஒத்த வார்த்தை சொன்னாலும்.. நச்!

உடனே சத்தம் வெளியே வராமல் இருக்க துணியை எடுத்து பெண்ணின் வாய்க்குள் திணித்தார்.. இதில் சிறிது நிமிடத்திலேயே அந்த பெண் மயங்கிவிட்டார்… பிறகு வெறி தீரும்வரை பெண்ணை நாசம் செய்தார்.. அதற்கு பிறகும் அடங்காத யோகிலால், அப்பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பி ஒன்றை சொருகி சித்ரவதை செய்திருக்கிறார்.

இந்த கொடூரம் நடந்து 3 நாட்களுக்கு பிறகு இளைஞன் திரும்பி வந்தார்.. நடந்ததை அண்ணனிடம் சொல்லி கதறினார்.. இதைக் கேட்டு துடித்து போன அண்ணன், யோகிலாலுக்கு எதிராக போலீசில் புகார் தந்தார்.. அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீசார் யோகிலாலை கைது செய்துள்ளனர்.

Source: OneIndia

Author Image
vikram