மதுரை அருகே மாணவர்கள் சாலை மறியல்..: 3 நாட்கள் பள்ளி திறக்காததால் போராட்டம்

மதுரை அருகே மாணவர்கள் சாலை மறியல்..: 3 நாட்கள் பள்ளி திறக்காததால் போராட்டம்

மதுரை: மதுரை அருகே 3 நாட்களாக தனியா பள்ளி ஒன்று திறக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நகரில் இயங்கிவரும் இந்திரா காந்தி மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளி கடந்த 3 நாட்களாக மூடப்பட்டுள்ளது.

அந்த பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு மூன்று மாதங்களாக ஊதியம் வழங்காததால் பல கட்ட போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்கள் மூன்று நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. இதனால் பள்ளி நிர்வாகம் தினமும் மாணவர்களின் பெற்றோருக்கு பள்ளி விடுமுறை என்று எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனையடுத்து அங்கு வந்த போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பின்னர் அவர்கள் கலந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy