பாம்புக்கு முத்தம் கொடுத்த சிங்கத்துக்கு முதல்ல முள்ள எடுத்து விடுங்க… செப்டிக் ஆயிட போகுது… ரஜினியை மரண கலாய், கலாய்க்கும் இணையப் பயனாளர்கள்…!

பாம்புக்கு முத்தம் கொடுத்த சிங்கத்துக்கு முதல்ல முள்ள எடுத்து விடுங்க… செப்டிக் ஆயிட போகுது… ரஜினியை மரண கலாய், கலாய்க்கும் இணையப் பயனாளர்கள்…!

உலகம் முழுவதும் பிரபலமான தொலைக்காட்சியான டிஸ்கவரியில்  ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சி “மேன் வெர்சஸ் வைல்டு”. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பேர் கிரில்ஸ் இயக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார்.

இதையும் படிங்க: ஏ.வி.எம்-மில் இருந்து சட்டையை பிடித்து வெளியே தள்ளியதால் வந்த வைராக்கியம்… இயக்குநர் அதிரவைக்கும் ஃபிளாஷ்பேக்…!

கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதியில் நடைபெற்ற ஷூட்டிங்கில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி தாறுமாறு வைரலாகி வருகிறது. 2 நாட்கள் வனப்பகுதியில் நடைபெற்ற ஷூட்டிங் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 

இதையும் படிங்க: ஆசை, ஆசையாய் ஹன்சிகாவிற்கு முத்தம் கொடுத்த சிம்பு… சோசியல் மீடியாவில் வைரலாகும் “மஹா” ரகளை…!

இதனிடையே ரஜினிக்கு காயம் ஏற்பட்ட தகவல் அறிந்து சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மிகுந்த கவலை அடைந்தனர். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட நடிகர் மற்றும் பிரபல கேமராமேன் நட்ராஜ், “ஒன்னும் ஆகாது… போனது சிங்கம்… காட்ட மட்டும் இல்ல நாட்டையும் ஆளும்…” என்று ட்வீட் போட்டுள்ளார். இந்நிலையில் ஷூட்டிங்கை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் காலில் முள் குத்தியதாகவும் தெரிவித்தார். 

ஒன்னும் ஆகாது.. போனது சிங்கம்…. காட்ட மட்டும் இல்ல நாட்டையும் ஆளும்….

— N.Nataraja Subramani (@natty_nataraj) January 28, 2020

இதுபோதாதா?… நம்ம நெட்டிசன்களுக்கும், மீம்ஸ் கிரியேட்டர்ஸுக்கும் சூப்பர் ஸ்டாரை சோசியல் மீடியாவில் வச்சி செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. ஏற்கனவே தர்பார் படம் ரிலீஸ் ஆனதில் இருந்து என்ன காரணமோ?… தெரியல, விஜய் ரசிகர்கள் சூப்பர்  ஸ்டாரை சோசியல் மீடியாவில் பங்கம் செய்து வருகின்றனர். அதனால் ஈஸியா கிடைச்ச வாய்ப்பை விடுவாங்களா?, அவங்களும் கலாய்க்க ஆரம்பிச்சிட்டாங்க. 

🦁

சிங்கத்துக்கு முதல்ல முள்ள எடுத்து விடுங்க. செப்டிக் ஆயிட போவுது. சுகர் வேற pic.twitter.com/LzGZw52MwC

— Shamurai (@Shamurai10) January 28, 2020

ரஜினிக்கு காயம் என நட்டி போட்ட ட்வீட்டை பார்த்த நெட்டிசன்களில் ஒருவர், சிங்கத்து முதல்ல முள்ள எடுத்து விடுங்க… செப்டிக் ஆயிட போகுது.. சுகர் வேற… என கமெண்ட் அடித்துள்ளார். 

அது எல்லாம் சரி சிங்கத்துக்கு எதோ முள்ளு குத்தி திரும்பி வந்துச்சாமே

அப்படியா 🤔#வரிஏய்ப்புரஜினி#சூப்பர்சங்கிரஜினி

— Sathish Kumar (@CoolSathish1520) January 29, 2020

இதையும் படிங்க: அன்று முதல் இன்று வரை… யூகிக்க முடியாத மாற்றம்… பர்த்டே பேபி ஸ்ருதி ஹாசனின் அரிய புகைப்பட தொகுப்பு…!

அது எல்லாம் சரி சிங்கத்துக்கு ஏதோ முள்ளு குத்தி திரும்பி வந்துச்சாமே அப்படியா?… என விஜய் ரசிகர் ஒருவர் நக்கலாக கேட்டுள்ளார். 

Source: AsianetTamil

Author Image
Kundralan M