சேலத்தில் மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி 3,500 பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்வு

சேலத்தில் மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி 3,500 பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்வு

சேலம்:  மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி சேலத்தில் நடைபெற்று வரும் விழிப்புணர்வு நிகழ்வில் ஒரேஇடத்தில் 3,500 பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். சேலம் நெத்திமேடு பகுதியில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இப்பள்ளியில் இயற்கை சுற்றுசூழல் குறித்தும், பள்ளி மாணவர்களிடையே மரங்கள் வளர்ப்பது குறித்தும் விழிப்புணர்வை  ஏற்படுத்தும் வகையில் ஒரேஇடத்தில் சுமார் 3,500 மாணவர்கள் பங்கேற்றனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது, பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் அனைத்து மாணவர்களும் அமர்ந்து, பச்சை நிற உடையணிந்து பழங்காலத்தில் மரங்கள் எவ்வாறு பசுமையாக காட்சியளித்தது என்பதையும், பின்னர் கருப்பு நிற உடையணிந்து தற்போதைய சூழ்நிலையில் மரங்கள் எவ்வாறு அழிந்து கொண்டிருக்கின்றன என்பதையும், மாணவர்கள் மிக அருமையாக அனைவரின் மத்தியில் செய்து காட்டினர்.

அதனை தொடர்ந்து எதிர்காலத்தில் வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்கவும், அதன் பிறகு ஒவ்வொருவரின் பிறந்தநாள் அன்றும் ஒரு மரத்தினை கட்டாயமாக நட வேண்டும் எனவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சின்னத்துரை நடிகர்களும் தற்போது கலந்து கொண்டனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy