28 கோயில் யானைகள் பங்கேற்ற புத்துணர்வு முகாம் வரும் 31-ம் தேதியுடன் நிறைவு

28 கோயில் யானைகள் பங்கேற்ற புத்துணர்வு முகாம் வரும் 31-ம் தேதியுடன் நிறைவு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற யானைகள் புத்துணர்வு முகாமில் உடல் எடை குறையாத யானைகளை தொடர்ந்து கவனிக்க மருத்துருவ குழு அமைக்கப்பட்டுள்ளது. தேக்கப்பட்டி கிராமத்தில் டிசம்பர் 31-ம் தேதி தொடங்கிய யானைகள் புத்துணர்வு முகாம், வருகிற 31-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதில் யானைகளின் உடல் எடை குறித்து மருத்துவ குழு ஆய்வு நடத்தியது.

யானைகள் புத்துணர்வு முகாமில் மருத்துவ குழு ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிறப்பு மருத்துவர், அனைத்து யானைகளும் உடல் ஆரோகியத்துடன் இருப்பதை அவர் கூறினார். இந்த புத்துணர்வு முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 28 யானைகள் பங்கேற்றன.

யானைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் நடை பயிற்சி வழங்கப்பட்டது. இருப்பினும் புத்துணர்வு முகாமில் உடல் எடை குறையாத சில யானைகளை கண்காணிக்க மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy