புதுவையில் காங்.அதிருப்தி எம்.எல்.ஏ ஆளுநரிடம் புகார்..: ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று ஆளுநருடம் சந்திப்பு

புதுவையில் காங்.அதிருப்தி எம்.எல்.ஏ ஆளுநரிடம் புகார்..: ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று ஆளுநருடம் சந்திப்பு

புதுச்சேரி: புதுச்சேரி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார். எம்.எல்.ஏ தனவேல் தனது ஆதரவாளர்களை அழைத்து கொண்டு ‘நீதி கேட்டு பேரணி’ என்ற தலைப்பில் பேரணி மேற்கொண்டார். அப்போது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து ஊழல் குறித்த ஆவணங்களை துணை நிலை ஆளுநரிடம் தாம் கொடுத்துள்ளதாக காங். அதிருப்தி எம்.எல்.ஏ தனவேல் கூறியுள்ளார். இந்த ஊழல் ஆதாரங்களை மத்திய அமைச்சர் அமித்ஷா-விடமும் கொடுக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பல ஆதாரங்களை திரட்டி வருவதாகவும், அவற்றை விரைவில் வெளிக்கொண்டு வருவேன் என்று எம்.எல்.ஏ தனவேல் கூறியுள்ளார். இதனிடையே புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தான் பக்கம் வருவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy