திருச்சியில் பாஜக நிர்வாகி விஜயரகு கொலை- மிட்டாய் பாபு கைது

திருச்சியில் பாஜக நிர்வாகி விஜயரகு கொலை- மிட்டாய் பாபு கைது

திருச்சியில் பாஜக நிர்வாகி விஜயரகு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மிட்டாய் பாபு சென்னையில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி:

திருச்சி பாலக்கரை மண்டல பாஜக செயலாளரான விஜயரகு நேற்று முன்தினம், காந்தி மார்க்கெட்டில் வெட்டி கொல்லப்பட்டார். 

இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகமது பாபு என்ற மிட்டாய் பாபு மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வந்தனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தி வந்தது. 

இந்நிலையில் விஜயரகு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மிட்டாய் பாபு உள்பட 2 பேரை தனிப்படை போலீசார் சென்னையில் வைத்து கைது செய்தனர்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan