வாணியம்பாடியில் மூடப்படாத போர்வெல்

வாணியம்பாடியில் மூடப்படாத போர்வெல்

வாணியம்பாடி: பயன்படாத போர்வெல்லில் விழுந்து குழந்தைகள் இறக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது. இதையடுத்து இவற்றை மூடும்படி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் வாணியம்பாடி காதர்பேட்டையில் தனியார் காம்ப்ளக்ஸ் ஒன்று உள்ளது. இதன் எதிரே உள்ள தனியார் லாட்ஜ் அருகில் பழுதடைந்த போர்வெல் ஒன்று திறந்த நிலையில் மூடப்படாமல் நீண்ட நாட்களாக உள்ளது. லாட்ஜ் அமைந்துள்ள இந்த சாலையின் வழியாக தினமும் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் என பலரும்  சென்று வருகின்றனர். இந்த மூடப்படாத போர்வெல்லில் சிறுவர்கள் யாராவது விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் அவல நிலை உள்ளது.

இதுகுறித்து  நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம். எனவே அசம்பாவித சம்பவம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த போர்வெல்லை மூட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy