சாலை பாதுகாப்பு வாரவிழா போட்டியில் பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் சாதனை

சாலை பாதுகாப்பு வாரவிழா போட்டியில் பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் சாதனை

பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம் முழுவதும் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் பரமத்திவேலூர் காவல் நிலையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, ஓவியம், கவிதை போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது இதில் பரமத்திவேலூரில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் பாண்டமங்கலம் ஆர்.என். ஆக்ஸ்போர்ட் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் தீபிகா, நவீன்பிரகாஷ், யாழினி, ஜீவஸ்ரீ, அனுஸ்ரீ, சவுந்தர்யா, சுவாதி மற்றும் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி மாணவிகள் ரியா, அக்சிதா, சிந்தனா, சுவேஷ்லா, தருண்ஸ்ரீ, ஸ்ரீநிதி, ரோஷினி ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரமத்திவேலூர் காவல்துறை ஆய்வாளர் மனோகரன் பரிசு வழங்கினார். வெற்றி பெற்றவர்களை ஆர்.என்.ஆக்ஸ்போர்டு கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகம், தாளாளர் சக்திவேல், செயலாளர் ராஜா, இயக்குனர்கள் அருள்,  சேகர், சம்பூரணம், மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy