அவிநாசி அருகே கார்-பஸ் மோதல் தாயுடன் நிருபர் பலி

அவிநாசி அருகே கார்-பஸ் மோதல் தாயுடன் நிருபர் பலி

அவிநாசி: திருப்பூரில் ஆங்கில நாளிதழ் ஒன்றின் நிருபராக பணியாற்றி வந்தவர் ராஜசேகர் (33). இவருக்கு 7 மாதத்துக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவரது மனைவிக்கு வளைகாப்பு நடக்க உள்ளது. விழாவுக்கு அழைப்பதற்காக மேட்டுப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு தாய் யமுனாராணி (52), சகோதரி பானுப்பிரியா(31), இவரது ஆண் குழந்தை இன்ப நித்திலன்(2) ஆகியோருடன் ராஜசேகர் நேற்று காரில் புறப்பட்டார். அவிநாசியை அடுத்த நரியம்பள்ளிப்புதூர் அருகே சென்றபோது, ஊட்டியில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் யமுனாராணி சம்பவ இடத்தில் பலியானார். ராஜசேகர் கோவை மருத்துவமனையில் உயிரிழந்தார். பானுப்பிரியா, இன்ப நித்திலன் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy