கதை முடிந்தது.. இதோ உங்கள் சுதந்திரம்.. பேஸ்புக்கில் போஸ்ட் போட்டு மாணவர்களை சுட்ட ராம் பகத் கோபால்

கதை முடிந்தது.. இதோ உங்கள் சுதந்திரம்.. பேஸ்புக்கில் போஸ்ட் போட்டு மாணவர்களை சுட்ட ராம் பகத் கோபால்

டெல்லி: டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய ராம் பகத் கோபால், துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பே அதை பற்றி பேஸ்புக்கில் போஸ்ட் செய்துள்ளார். அவரின் பேஸ்புக் பக்கத்தில் தீவிரவாதத்தை விதைக்கும் பல கருத்துக்கள் இடம்பெற்று உள்ளது.

டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் சிஏஏவிற்கு எதிராக அமைதியாக இன்று போராட்டம் நடந்தது. அவர்கள் சார்பாக இன்று மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

அமைதியாக நடந்து வந்த போராட்டத்தில் இன்று உள்ளே புகுந்த நபர் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். பின்பக்கம் போலீஸ் இருப்பதும் தெரிந்தும் அவர் மக்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். அவர் இப்படி துப்பாக்கியால் சுட்டதில் ஒரு கல்லூரி மாணவர் கையில் காயம் அடைந்தார்.இந்த மாணவர், காஷ்மீரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

imageஜாமியாவில் சுட்டது ராம் பகத்.. அவரது உடையை வைத்து கண்டுபிடிங்க.. மோடி மீது ஓவைஸி தாக்கு!

இணையம் வைரல்

இந்த நிலையில் இவர் மாணவர்களை துப்பாக்கியால் சுடும் சம்பவம் இணையம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காந்தி சுடப்பட்ட அதே நாளில்தான் இந்த சம்பவமும் நடந்துள்ளது. இன்று மாணவர்களை நோக்கி சுட்ட நபரும் வலதுசாரி கொள்கை கொண்டவர்தான். கருப்பு நிற ஜாக்கெட் அணிந்து இவர் மாணவர்களை நோக்கி சுட்டார். இவரின் அடையாளம் இப்போது காணப்பட்டுள்ளது. போலீஸ் இவரை கைது செய்யும் போது, இவர் தன்னுடைய பெயரை ராம் பகத் கோபால் என்று கூறினார்.

போலீஸ் எதுவும் செய்யவில்லை

இவர் மாணவர்களை துப்பாக்கியால் சுடும் போது அங்கிருந்த போலீஸ் எதுவும் செய்யவில்லை. மிகவும் மெதுவாக நடந்து வந்தனர். பொடி நடையாக அங்கே நடந்து வந்து அவரை பிடித்து அழைத்து சென்றனர். வீட்டிற்கு வந்த விருந்தினரை உபசரிப்பதை போல் ராம் பகத்தை போலீசார் உபசரித்தனர். ராம் பகத் மாணவர்களை நோக்கி சுடும் போது.. சுதந்திரம் தானே கேட்டீர்கள்.. இதோ வைத்துக் கொள்ளுங்கள்.. நீங்கள் கேட்ட சுதந்திரம் என்று குறிப்பிட்டார்.

எந்த ஊர்

இவரின் சொந்த ஊர் நொய்டா அருகே ஜெவேர் ஆகும். இவர் பல்வேறு வலதுசாரி அமைப்புகளில் செயல்பட்டு வருகிறார். இவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், நடுநிலைவாதிகளுக்கு எதிராகவும் வெறுப்பை உமிழந்து வந்துள்ளார். சிஏஏவிற்கு எதிராக போராடும் எல்லோரையும் கொல்ல வேண்டும் என்று தீவிரமாக வீடியோக்களில் பேசி இருக்கிறார்.டெல்லி ஷாகீன் பாக் போராட்டத்தை குறிப்பிட்டு, உங்கள் கதை முடிந்தது என்றும் கூறியுள்ளார்.

போஸ்ட்

ஜாமியா மிலியா பல்கலையில் துப்பாக்கி சூடு நடத்தும் முன், என்னுடைய கடைசி நாள் இது. என்னுடைய கடைசி பயணத்தின் போது, என் உடல் மீது காவி நிற துணியை போர்த்திடுங்கள். பின் எல்லோரும் சேர்ந்து ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்கிடுங்கள், என்று குறிப்பிட்டுள்ளார். நான் அங்கு மாணவர்களை சுட போகிறேன் என்று வெளிப்படையாக போஸ்ட் செய்துவிட்டுதான், அவர் ஜாமியா சென்று மாணவர்களை சுட்டுள்ளார்,என்பது குறிப்பிடத்தக்கது.

Source: OneIndia

Author Image
vikram