ராணிப்பேட்டை அருகே பைப்லைன் உடைப்பால் வீணாகும் குடிநீர்

ராணிப்பேட்டை அருகே பைப்லைன் உடைப்பால் வீணாகும் குடிநீர்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அடுத்த பொன்னை ஆற்றில் இருந்து தக்காம்பாளையம், லாலாப்பேட்டை, அக்ராவரம், வானாபாடி, செட்டித்தாங்கல், அம்மூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பைப்லைன் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. தக்காம்பாளையம் பகுதியில் உள்ள பைப்லைனில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.

இதனால் தக்காம்பாளையம் முதல் அம்மூர் பகுதி வரை போதிய குடிநீரின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பைப்லைனை உடனடியாக சீரமைத்து சீரான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy