கொரோனா வைரசிலிருந்து வராமல் தடுப்பது எப்படி..?

கொரோனா வைரசிலிருந்து வராமல் தடுப்பது எப்படி..?

கொரோனா வைரசிலிருந்து வராமல் தடுப்பது எப்படி..? 
 
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். சீனாவில் தோன்றிய கொரோனா வைரசுக்கு உலக நாடுகள் முழுவதும்  ஒரு விதமான பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில் இந்தியாவிலும் தற்போது கேரள மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என உறுதி செய்யப்பட்டு உள்ளது.இதன் காரணமாக இந்திய மக்களும் பீதியில் இருக்கின்றனர். இந்த ஒரு தருணத்தில் கொரோனா வைரஸ் வந்தால் எந்த விதமான அறிகுறி இருக்கும் என்பதை முதலில் பார்க்கலாம்.

ஆரம்ப கட்டத்தில் காய்ச்சல், இருமல், தொண்டையில் வீக்கம் இருக்கும். பின்னர் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். பிறகு மெல்ல மெல்ல அதிகரித்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதன் பின்னர் கிட்னியை பாதிக்கலாம் .மேலும் மூளை சாவு அடையவும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் நேரடியாக நரம்பு மண்டலத்தை தாக்கி நேரடியாக மூளையை தாக்குகிறது.

ஆனால் இவை அனைத்தும் ஒரே நேரத்தில் நடந்து விடுமா என்றால் இல்லை. நோய் எதிர்ப்பு தன்மை அதிகமாக இருப்பவர்களுக்கு இந்த பாதிப்பில் இருந்து மிக எளிதாக நீண்டு விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு தருணத்தில் இதனை பரவாமல் தடுக்கவும் இந்த வைரஸால் பாதிக்கப்படாமல் இருக்கவும் நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? முதலில் நம் கையை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் வேண்டும்… எங்கு சென்றாலும் பொது இடங்களுக்கு சென்று வந்தாலும், பொதுக் கூட்டத்திற்கு சென்று வந்தாலும் கை கால் முகம் நன்கு கழுவிவிட்டு பின்னர் தான் உண்ண வேண்டும். எப்போதும் கைகளை தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் சிறந்தது.

உண்ணும் உணவைப் பொறுத்தவரையிலும் நன்கு கொதிக்க வைத்த அல்லது நன்கு வேக வைக்கப்பட்ட உணவுப் பொருட்களை உண்ணுதல் வேண்டும். வேக வைத்த உணவுப்பொருட்களை கண்டிப்பாக எடுத்துக் கொள்ளுதல் கூடாது. நோயால் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் சென்று பேசுவதோ அல்லது அவர்களை தொட்டு பேசுவதோ கூடாது. 

Source: AsianetTamil

Author Image
Kundralan M