டெல்லி சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்ய மத்திய மந்திரிக்கு 3 நாள் தடை – தேர்தல் கமிஷன் உத்தரவு

டெல்லி சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்ய மத்திய மந்திரிக்கு 3 நாள் தடை – தேர்தல் கமிஷன் உத்தரவு

டெல்லி சட்டசபை தேர்தல், வருகிற 8-ந் தேதி நடக்கவுள்ள நிலையில் மத்திய மந்திரி பிரசாரம் செய்ய 3 நாள் தடை விதித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி:

டெல்லி சட்டசபை தேர்தல், வருகிற 8-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி நடந்த பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டங்களில் மத்திய நிதித்துறை இணை மந்திரி அனுராக் தாக்குர், மேற்கு டெல்லி பா.ஜனதா எம்.பி. பர்வேஷ் சாகிப் சிங் ஆகியோர் விரும்பத்தகாத முறையில் பேசியதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன.

மத்திய மந்திரி அனுராக் தாக்குர், பிரசாரம் செய்ய 3 நாட்களும் (72 மணி நேரம்), பர்வேஷ் சாகிப் சிங் பிரசாரம் செய்ய 4 நாட்களும் (96 மணி நேரம்) தடை விதித்து தேர்தல் கமிஷன் நேற்று உத்தரவிட்டது. இந்த தடை உத்தரவு, நேற்று மாலை 5 மணி முதல் அமலுக்கு வந்தது.

2 பேரும், இரு மதங்களிடையே உள்ள வேறுபாடுகளை மேலும் பெரிதாக்கும்வகையில் பேசி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேர்தல் கமிஷன் தனது உத்தரவில் கூறியுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan