‘இந்தியர்களை மீட்க சீனா விரைந்தது இரண்டு விமானம்’..!!

‘இந்தியர்களை மீட்க சீனா விரைந்தது இரண்டு விமானம்’..!!

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட இந்தியர்களை மீட்க இந்தியாவில் இருந்து இரண்டு விமானங்கள் விரைந்திருக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு செய்திருக்கிறது. அதேநேரத்தில் சர்வதேச மருத்துவ அவசர பிரகடனம் செய்திருக்கிறது.
சீனாவில் ;உள்ள வுகான் பகுதியில் கொரேர்னா வைரஸ் தாக்குதல்தலால் இதுவரைக்கும் நூறுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ளவர்கள் வெளிஇடங்களுக்கு வர முடியாமலும் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஓட்டல்கள் ~hப்பிங் மால்கள் வைரக்கும் இந்த வைரஸ் பயத்தால் யாரும் வெளியில் வராமல் இருக்கிறார்கள். இதனால் உணவு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.
வுகான் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் அயல்நாட்டு மாணவர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பு பணியும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியாவிற்கு முதன் முதலாக கொரோனா வைரஸ் கேரளா மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவருக்கு வந்திருப்பதை இந்திய சுகாதாரத்துறை உறுதி செய்து அவருக்கு தீவிர மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
உலக நாடுகளை அவ்வப்போது பன்றிக்காய்ச்சல் கொரனோ போன்ற வைரஸ் நம்மை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.
சீனாவில் வசிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு இன்று இரண்டு விமானாங்கள் வுகான் பகுதிக்கும் இன்னொரு விமானம் மற்றொரு பகுதிக்கும் செல்லுகிறது. அப்படி அழைத்துவரப்படும் இந்தியர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதல் மலேசியா சிங்கப்பூர் இந்தோனேசியா பர்மா இந்தியா அமெரிக்கா பிரிட்டன்  போன்ற நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாகவே சர்வதேச மருத்துவ அவசர பிரகடனத்தை உலக சுகாதார நிறுவனம் பிரகடனம் செய்திருக்கிறது.
இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வருவோரை தீவிரமாக கண்காணித்து அதன் பிறகே அனுப்பி வருகிறார்கள். உலகத்தையே உலக்;கிக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் பொதுமக்களிடத்தில் ஒரு அச்சத்தை தான் ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது தான் டெங்கு பயத்தில் இருந்து பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள  பல்வேறு தடுப்பு மருந்துகளை சித்தமருத்துவம் ஹோமியோபதி மருந்துகளை நாட ஆரம்பித்து இருக்கிறார்கள்.

T.Balamurukan

Source: AsianetTamil

Author Image
Kundralan M