மைனர் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அதிமுக பெண் பிரமுகர் உட்பட 2 பேர் கைது: ஆம்பூர் மகளிர் காவல் துறையினர் விசாரணை

மைனர் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அதிமுக பெண் பிரமுகர் உட்பட 2 பேர் கைது: ஆம்பூர் மகளிர் காவல் துறையினர் விசாரணை

ஆம்பூர்: ஆம்பூர் அருகே அதிமுக பெண் பிரமுகர் ஒருவர் பெங்களூரு மைனர் பெண்ணை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கோபால் மனைவி பிரேமா(62). அதிமுக மாவட்ட பிரதிநிதி. மேலும் அதே பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராக தற்போது 2வது முறையாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் பிரேமா கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரை சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணை உமராபாத்திற்கு அழைத்து வந்துள்ளார். அங்குள்ள ஒரு ஆடம்பரமான இடத்தில் அந்தப் பெண்ணை வைத்து பாலியல் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் அந்த மைனர் பெண்ணை தேடி அவரது தாய் நேற்றுமுன்தினம் உமராபாத்திற்கு வந்தார். அங்கு மைனர் பெண்ணை கண்டுபிடித்து  அவரிடம் பேசியுள்ளார். அப்போது அந்த மைனர் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும், அதற்கு  தனக்கு நாள் ஒன்றுக்கு ₹4 ஆயிரம் தர பிரேமா ஒத்துக் கொண்டதாகவும் தனது தாயிடம் கூறினார்.

இதுகுறித்து அப்பெண்ணின் தாய்க்கும், பிரேமாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து மைனர் பெண்ணின் தாய் போலீஸ் அவசர எண்ணை ெதாடர்பு கொண்டு சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தார். இதையடுத்து உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேமா, அவருடன் இருந்த தேவராஜ் மனைவி லதா  மற்றும் மைனர் பெண்ணை ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அந்த மைனர் பெண்ணிற்கு பணத்தாசை காட்டி பிரேமா பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும், மேலும் அந்தப் பெண்ணை ஏமாற்றி பணம் தராமல் மோசடி செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேமா, உடந்தையாக இருந்த லதா ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அந்த மைனர் பெண்ணை பெண்கள் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy