ஏப்ரல் முதல் கல்லெண்ணெய், டீசல் விலை ஒரு ரூபாய் வரை உயரும்

ஏப்ரல் முதல் கல்லெண்ணெய், டீசல் விலை ஒரு ரூபாய் வரை உயரும்

தூய்மையான எரிபொருளுக்கு மாறுவதால் ஏப்ரல் முதல் பெட்ரோல், டீசல் விலை ஒரு ரூபாய் வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

பெட்ரோல், டீசல் பயன்படுத்தும் வாகனங்களால் வெளியேற்றப்படும் புகையே காற்று மாசுபடுவதற்கு முக்கிய காரணம். எனவே வாகனங்களில் வெளியேறும் புகையை குறைக்கும் விதத்தில் தூய்மையான எரிபொருளுக்கு இந்தியா மாறுகிறது.

 இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன தலைவர் சஞ்சீவ் சிங் கூறும்போது, “தற்போது பி.எஸ்.-4 ரக எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. ஏப்ரல் 1-ந் தேதிக்குள் நாடு முழுவதும் 100 சதவீதம் பி.எஸ்.-6 ரக பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ளோம். இதன் காரணமாக ஏப்ரல் முதல் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 50 பைசா முதல் ஒரு ரூபாய் வரை அதிகரிக்கும்” என்றார்.

Source: Maalaimalar

Author Image
murugan