நிர்பயா வழக்கு- வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி

நிர்பயா வழக்கு- வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி

நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மாவின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

புதுடெல்லி:

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் வரும் பிப்ரவரி 1-ம் தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. 

இதற்கிடையே, தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி 4 குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா கடந்த சில தினங்களுக்கு முன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பினார்.

இந்நிலையில், நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மாவின் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் வினய் சர்மாவை தூக்கிலிடுவதற்கான தடை நீங்கி உள்ளது. 

ஏற்கனவே, மற்றொரு குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan