ஆதிச்சநல்லுரில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை – நிர்மலா சீதாராமன்

ஆதிச்சநல்லுரில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை – நிர்மலா சீதாராமன்

பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழகத்தின் ஆதிச்சநல்லுரில் தொல்லியல் துறை சார்பில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார்.

புதுடெல்லி:

கடந்த 5 ஆண்டுகளில் 64வது இடத்தில் இருந்து சுற்றுலா துறையில் 34-வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது.  கடந்த 5 ஆண்டுகளில் சுற்றுலா துறை மிகப் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.

சுற்றுலா துறையை மேம்படுத்த பல்வேறு முக்கியமான நகரங்கல் தேஜஸ் ரயில் மூலம் இணைக்கப்படும். சுற்றுலா துறையை மேம்படுத்த ரூ. 2500 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

தமிழகம், அரியானா, உத்தர பிரதேசம், குஜராத் உள்பட 5 மாநிலங்களில் தொல்லியல் துறை சார்பில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் தொல்லியல் சிறப்புமிக்க ஆதிச்சநல்லூரில் சிறப்பு வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என குறிப்பிட்டார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan