காரியாபட்டி பேரூராட்சி பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட இளைஞர் நற்பணி மன்றம்

காரியாபட்டி பேரூராட்சி பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட இளைஞர் நற்பணி மன்றம்

காரியாபட்டி: காரியாபட்டி பேரூராட்சி பகுதியில் இளைஞர் நற்பணி மன்றத்தினர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். காரியாபட்டியில் இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விருதுநகர் நேரு யுவகேந்திராவுடன் இணைக்கப்பட்ட காரியாபட்டி அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து காரியாபட்டி பேரூராட்சி திருமண மண்டபம் பின்புறம் மத்திய அரசின் தூய்மை விழிப்புணர்வு மற்றும் பணி முகாம் நிகழ்வில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

மேலும், அப்பகுதியில் இருந்த செடிகளை அகற்றி இளைஞர் மன்றத்தினர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் அன்னைதெரசா இளைஞர் நற்பணி மன்றத்தின் செயலாளர் அருண்குமார், நிர்வாக குழு உறுப்பினர் மணிகண்டன் உட்பட இளைஞர் மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy