வத்திராயிருப்பு அருகே மேலக்கோபாலபுரம் விலக்கில் சேதமடைந்த நிழற்குடை சீரமைக்கப்படுமா?… பயணிகள் எதிர்பார்ப்பு

வத்திராயிருப்பு அருகே மேலக்கோபாலபுரம் விலக்கில் சேதமடைந்த நிழற்குடை சீரமைக்கப்படுமா?… பயணிகள் எதிர்பார்ப்பு

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே மேலக்கோபாலபுரம் விலக்கில் உள்ள நிழற்குடையில் பயணிகள் அமரும் இடம் சேதமடைந்து கிடப்பதை சரிசெய்ய பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பு அருகே மேலக்கோபாலபுரம் விலக்கில் புதுப்பட்டி ஊருக்கு செல்லக்கூடிய பயணிகள் வெயில், மழையில் பாதிக்காமல் நிற்பதற்காக நிழற்குடை ஒன்று உள்ளது. அந்த நிழற்குடையில் உள்ள பயணிகள் அமரும் இருக்கைகள் பல நாட்களாக சேதமடைந்த நிலையில் உள்ளது. அதோடு தூசி படிந்த நிலையில் இருப்பதோடு, நிழற்குடைக்குள் லைட் வசதி இல்லாததால் குடிமகன்கள் நிழற்குடையை பாராக மாற்றியுள்ளனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் நிழற்குடைக்குள் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதோடு, கரிக்கட்டையால் தவறான வாசககங்கள் எழுதப்பட்டுள்ளன. இதனால் பெண் பயணிகள் அங்கு நிற்க அஞ்சுகின்றனர். எனவேநிழற்குடையில் பயணிகள் அமரும் இடம் மற்றும் உடைந்து கிடக்கும் தரைகள் மற்றும்நிழற்குடைக்குள் உள்ள சுவரொட்டிகளை அகற்றிவிட்டு சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy