அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடம் இடிப்பு

அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடம் இடிப்பு

கூடலூர்: கூடலூர் நகராட்சிக்கு 19வது வார்டு  காளம்புழாபகுதிக்கு செல்லும் சாலையை ஒட்டி பிரிவு 17 நிலத்தில் தனியார் ஒருவரால் கட்டப்பட்டு வந்த இரண்டு மாடிக் கட்டிடம் கட்ட கடந்த வருடம் வருவாய்த் துறையால் தடை விதிக்கப்பட்டது. இந்த கட்டிடம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடத்தை முழுமையாக இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இதை அடுத்து கட்டிடத்தை முழுமையாக இடித்துக் அகற்றும் பணி நேற்று காலை துவங்கியது. கூடலூர் தாசில்தார் சங்கீதாராணி  மேற்பார்வையில் வருவாய்த்துறையினர் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் கட்டிடத்தை முழுமையாக இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy