Press "Enter" to skip to content

அந்த ஜெயக்குமாரை முதல்ல பதவிய விட்டு தூக்குங்க!: எடப்பாடியாருக்கு வாங்குதல் போடும் ஸ்டாலின்

 

*    என்னுடைய தந்தை பாக்கிஸ்தானில் பிறந்து, அங்கு விமானப்படையில் பணியாற்றினார். ஆனால் நான் இந்திய குடியுரிமை பெற்றுள்ள முழுமையான இந்தியன். எனக்கு பத்மஸ்ரீ விருது கொடுப்பதற்கும், என் தந்தைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? என்னுடைய தந்தையின் பெயரை வைத்து தற்போது தேவையில்லாமல் சிலர் அரசியல் செய்கின்றனர். தங்களுடைய குறுகிய அரசியல் நோக்கத்துக்காக இதைச் செய்கின்றனர். 
–    அட்னன் சாமி (பாடகர்)

*    நாட்டுக்காக நான் என் உயிரையும் பணயம் வைத்துள்ளேன் எனக்கு சர்க்கரை வியாதி உள்ளது. தினமும் இன்சுலின் எடுத்துக் கொள்கிறேன். இந்த வியாதி உள்ளவர்கள் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தால் உயிரிழக்கும் ஆபத்து உள்ளது. ஆனாலும் நான் ஊழலுக்கு எதிராக இரண்டு முறை உண்ணாவிரதம் இருந்துள்ளேன். என்னை பா.ஜ.க. ‘பயங்கரவாதி’ என்கிறது. என்னை பயங்கரவாதியாக பார்க்கின்றனரா? அல்லது தங்கள் வீட்டில் ஒருவனாக பார்க்கின்றனரா என்பதை டெல்லி மக்கள் தேர்தலில் முடிவு செய்வார்கள். 
–    அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி முதல்வர்)

*    கோட்சேவின் கொள்கையை பின்பற்றுவதாக வெளியில் சொல்லிக்கொள்ளும் தைரியம் மோடிக்கு இல்லை. அதைத்தவிர அவர்கள் இருவருக்கும் எந்த  வித்தியாசமும் இல்லை. இந்திய மக்களிடம், தாங்கள் இந்தியர்கள் என நிரூபிக்குமாறு மோடி கூறுகிறார். இதைச் சொல்ல அவர் யார்? யார் இந்தியர் என முடிவு செய்ய அவர் யார்? நான் இந்தியனா என முடிவு செய்யும் அதிகாரத்தை அவருக்கு யார் கொடுத்தது?
–    ராகுல் காந்தி (காங்கிரஸ் எம்.பி.)

*    கடந்த 2002-03ம்  நிதியாண்டில் 2.63 கோடி ரூபாய் கடன் வழங்கினேன்; அதன் வாயுலாக 1.45 லட்சம் ரூபாய் வட்டி கிடைத்தது. இதற்கு முறையாக வரி செலுத்தியுள்ளேன். மேலும் 2004- 05ம் ஆண்டில் 1.71 கோடி ரூபாய் கடன் வழங்கினேன். ஆனால் கொடுத்த பணம் வசூலாகாமல் 33.93 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே கடன் வழங்கினேன். வட்டிக்கு கடன் கொடுப்பதை தொழிலாகவோ, வியாபாரமாகவோ செய்யவில்லை. 
–    ரஜினி தரப்பில் வருமான வரித்துறைக்கு தரப்பட்ட விளக்கமாக பத்திரிக்கைகளில் வந்துள்ள தகவல். 

*    மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தன்னிடம் பெரும்பான்மை பலம் இருக்கிறது என்பதற்காக, அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றி வருகிறது. மக்களிடையே பயத்தையும், பிரிவினைவாதத்தையும் உருவாக்குகிறது. 
–    கனிமொழி (தி.மு.க. எம்.பி.)

*    இந்து கோவில்களை முதலில் அறநிலையத்துறையிடம் இருந்து மீட்க வேண்டும். கோவில்களில் எந்த மொழியில் வேண்டுமானாலும் வழிபாடு, பூஜைகள் செய்யலாம். குடியுரிமைச் சட்டத்தை இன்னும் கடுமையாக ஆக்க வேண்டும். 
–    ராமகோபாலன் (இந்து முன்னணி நிறுவனர்)

*    நம் முன்னோர் வாழ்க்கை முறை ஆரோக்கியமாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் பாட்டில்களில் அடைத்து குடிநீர் விற்கப்படவில்லை. பதப்படுத்தப்படாத உணவை உட்கொண்டனர். தற்போது அந்த நிலை மாறிவிட்டது, அதை மீட்டெடுக்க வேண்டும். 
–    பீலா ராஜேஷ் (தமிழக சுகாதாரத்துறை செயலர்)

*    தமிழகத்தில் நடிகர் ரஜினியின் அரசியல் வருகை 60 ஆண்டுகால திராவிட அரசியலுக்கு மாற்றாக அமையும். திராவிட கட்சிகளின் தலைவர்கள் ரஜினியுடன் கைகோர்ப்பர். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி போல இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் அரணாக செயல்படுவார். 
–    தடா பெரியசாமி (பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர்)

*    பாரத்நெட்! எனப்படும் நாடு தழுவிய இணையதள திட்டத்தில் தமிழகத்தில் முறைகேடு நடந்தது. ஆனால், அதை மறைக்க முயலும் தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திட்டமே துவக்கப்படவில்லை என்கிறார். அடுத்து, தமிழகத்தில் எங்கள் ஆட்சி, ஸ்டாலின் தலைமையில் அமையும் போது நிச்சயம் இதை விசாரிப்போம். 
–    ஐ.பெரியசாமி (மாஜி தி.மு.க. அமைச்சர்)

*    டி.என்.பி.எஸ்.சி., முறைகேடு தொடர்பாக அந்தத் துறை அமைச்சர் ஜெயக்குமாரை பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும். எதற்கெடுத்தாலும் ‘சூப்பர் ஸ்போக்ஸ் பெர்சன்’ போல பேட்டியளிக்கும் அவருக்கே தெரியாமல், அந்த முறைகேடு எப்படி நடந்தது
–    மு.க. ஸ்டாலின் (தி.மு.க. தலைவர்)
 

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »