“வரவு செலவுத் திட்டம் 2020” – பிரதமர் சொன்னது என்ன..?

“வரவு செலவுத் திட்டம் 2020” – பிரதமர் சொன்னது என்ன..?

“பட்ஜெட் 2020” – பிரதமர் சொன்னது என்ன..? 

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் குறித்து பிரதமர் நரேந்திர மோடி  தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவை வெளியிட்டு உள்ளார். 

அதில், மத்திய பட்ஜெட் தாக்கல் 2020  இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வாரி வழங்கும்  வகையில் உள்ளது என தெரிவித்தார்

குறிப்பாக உள்கட்டமைப்பில் அதிக முதலீடு செய்யப்படுவதால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்  என்றும் விமான நிலையங்கள் கட்டுவதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும்  தெரிவித்து உள்ளார். 

அதே போன்று மாவட்டம் முழுதும் ஏற்றுமதி முனையங்கள் ஏற்படுத்தப்படுவதன் மூலம் இளைஞர்கள் ஏற்றுமதி செய்வதில் பெரும் ஆவலாக முன்வருவார்கள். இதன் மூலம் சுயமாக வேலை வேலைப்பாய் உருவாக்கி கொள்ள முடியும் என்றும் தெரிவித்து உள்ளார். 

Sharing my views on the #JanJanKaBudget https://t.co/ipsAaMO0lJ

— Narendra Modi (@narendramodi) February 1, 2020

மேலும்  சுற்றுலா துறையில் அதிக வேலை வாய்ப்பு உருவாக உள்ளது என்றும் மிக சிறந்த பகட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமனுக்கு நன்றி என்றும் தெரிவித்து உள்ளார் பிரதமர் மோடி
Source: AsianetTamil

Author Image
Kundralan M