தனது வழக்கை நடத்துவதற்காக இந்திய நண்பரிடம் உதவி கேட்ட விஜய் மல்லையா

தனது வழக்கை நடத்துவதற்காக இந்திய நண்பரிடம் உதவி கேட்ட விஜய் மல்லையா

இந்தியாவில் தனது வழக்கை நிர்வகிக்க உதவி செய்யுமாறு முக்கியநபருடன் விஜய் மல்லையா தொலைபேசியில் பேசியதாக அமலாக்கத்துறையினர் தகவல் தெரிவித்து உள்ளனர்.

புதுடெல்லி:

இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல் தொழில் அதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பி ஓடினார். அங்கு தஞ்சம் அடைந்த அவரை, இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் தனது வழக்கை நிர்வகிக்க உதவி செய்யுமாறு முக்கியநபருடன் மல்லையா தொலைபேசியில் பேசியதாக அமலாக்கத்துறையினர் தகவல் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அனுராக் ஷைன் முன் அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்த அறிக்கையில், விமானத்துறையில் செல்வாக்கு பெற்றவரான தீபக் தல்வாரின் நெருங்கிய உதவியாளர் யாஸ்மின் கபூருடன் கடந்தவாரம் தொலைபேசியில் பேசிய விஜய் மல்லையா, இந்தியாவில் தன் மீதுள்ள வழக்குகளை நிர்வகிக்க முடியுமா? என்று உதவி கேட்டுள்ளார் எனத்தெரிவித்துள்ளது.

அத்துடன் மல்லையாவுடனான யாஸ்மின் கபூரின் உரையாடல் தொடர்பாக எழுதப்பட்ட இரண்டு பக்க நகல்களை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சமர்ப்பித்தது.

விஜய் மல்லையா உதவி கோரியிருக்கும், யாஷ்மின் கபூரும் அமலாக்கத்துறை வழக்கில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan