ஓரினச்சேர்க்கையில் மாணவன் ஒருவனை கதற கதற….!!  பாலியல் உறவு செய்து கண்டக்டருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது கரூர் நீதிமன்றம்

ஓரினச்சேர்க்கையில் மாணவன் ஒருவனை கதற கதற….!! பாலியல் உறவு செய்து கண்டக்டருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது கரூர் நீதிமன்றம்

 

பள்ளி மாணவன் ஒருவனை ஓரினச்சேர்க்கையில் ஈடுபத்தி கதற கதற பாலியல் உறவு கொண்டார் கண்டக்டர். மாணவன் வாயில் துணியை அமுக்கி வைத்துக்கொண்டு உறவில் ஈடுபட்டதால் மயங்கிப்போனான் மாணவன். இதனால் எங்கே வெளியில் போய் சொல்லி விடுவானோ என்று பதறிய காமவெறியன் மாணவனை கொலை செய்த சம்பவம் கடந்த ஆண்டு பரபரப்பாக இருந்தது. இரண்டு வருடங்களுக்கு பிறகு அந்த காமவெறியனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது நீதிமன்றம்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியை சேர்ந்த 13 வயதுடைய 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவன்.  கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தான். அப்போது க.பரமத்தி விசுவநாதபுரி சலவைக்கல் தெருவை சேர்ந்த மினிபஸ் கண்டக்டரான பிரதீப், வெளிநாட்டு சாக்லெட் வாங்கி தருவதாக அச்சிறுவனிடம் ஆசைவார்த்தை சொல்லியிருக்கிறான்.

அதை நம்பி அந்த சிறுவனும் சென்றான். பின்னர் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் சிறுவனை அழைத்து சென்ற பிரதீப், வலுக்கட்டாயமாக ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு உறவு கொண்டிருக்கிறான்.எங்கே, நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் தாம் மாட்டிக்கொள்வோமோ? என பயந்த  பிரதீப், துணியால் அச்சிறுவனின் வாய், மூக்கினை அழுத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டான்.

பள்ளிக்கு சென்ற மகன் வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சிறுவன் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து பெற்றோர்கள், உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடிபார்த்தனர். இந்த நிலையில் எம்.ஜி.ஆர். நகர் வாய்க்கால் அருகே உள்ள சீத்தைக்காட்டில் அச்சிறுவன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து அச்சிறுவனின் தாய், க.பரமத்தி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார்,போக்சோ சட்டம்  உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை கைது செய்தனர்.

இந்த கொலை தொடர்பாக கரூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் விசாரணை முடிந்ததால், நேற்று நீதிபதி சசிகலா தீர்ப்பு வழங்கினார். அதில், பிரதீப்புக்கு ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்திய குற்றத்திற்கு வாழ்நாள் சிறை தண்டனையுடன், ரூ.1,000 அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு மாத சிறை தண்டனையும் வழங்கப்படுகிறது.
 கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையுடன் ரூ.1,000 அபராதமும், கட்டதவறினால் மேலும் ஒரு மாத சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. இதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். மேலும் இறந்து போன சிறுவன் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
TBalamurukan

Source: AsianetTamil

Author Image
Kundralan M