குண்டப்பா…குண்டுபூசனி…னு கேலி செய்த பெண் கல்லெண்ணெய் ஊற்றி எரித்து கொலை..!!  இந்தோனேசியாவை அதிரச் செய்த சம்பவம்.

குண்டப்பா…குண்டுபூசனி…னு கேலி செய்த பெண் கல்லெண்ணெய் ஊற்றி எரித்து கொலை..!! இந்தோனேசியாவை அதிரச் செய்த சம்பவம்.

தன்னுடன் பணிபுரியும் ஆண் ஒருவரை குண்டப்பா ,குண்டுபூசி என்று கேலி செய்தாதற்காக அந்த பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த கொலை செய்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ரோசிடா, அலி என்கிற இருவரும் இந்தோனேசியவை சேர்தவர்கள்.இருவரும் சிறு வயதில் இருந்தே ஒரே பகுதியில் வசித்து வந்திருக்கிறார்கள். இருவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தனர். இந்தநிலையில் ,அலியை பார்த்து ரோசிடா குண்டு பூசனிக்காய் ,குண்டப்பா என்றும் மல்யுத்த வீரர்களூடனும் ஒப்பிட்டு அவ்வப்போது கேலி செய்வது வழக்கமாக இருந்திருக்கிறது.

ரோசிடா எனும் அந்தப் பெண் கடந்த 24ஆம் தேதி வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.இதனால் சந்தேகம் அடைந்த ரோசிடா பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.  தென்னந்தோப்பு ஒன்றிற்குள் அந்தப் பெண்ணின் எரிந்து கரிக்கட்டையான உடல்தான் கிடைத்தது. சற்று தூரத்தில் அந்தப் பெண்ணின் தலைக்கவசம் கண்டுபிடிக்கப்பட்டது.ஒரு வாரத்துக்கு முன்பு இருந்தே அலி இந்தக் கொலைக்குத் திட்டமிட்டதாகக் கூறப்பட்டுகிறது. 

சம்பவத்தன்று ரோசிடா வேலை முடிக்கும் வரை காத்திருந்த அலி, ரோசிடாவின் டூவீலரில் தம்மை வீட்டுக்கு உடன் அழைத்துச் செல்லுமாறு சொல்லியிருக்கிறரர்.ரோசிடாவும் ,அலியின் திட்டம் தெரியாமல் சரி என்று சொல்லி சந்தோஷமாக அழைத்து சென்றிருக்கிறார்.

பொன்டோக் நோங்கோ கிராமத்துக்கு அருகில் உள்ள தென்னந்தோப்புக்குச் சென்றதும் ரோசிடாவை வாகனத்திலிருந்து கீழே தள்ளிவிட்ட அலி, ரோசிடாவின் கழுத்தை நெறித்துக் கொன்றிருக்கிறார். மறைத்து எடுத்துச் சென்ற பெட்ரோலை ரோசிடாவின் சடலத்தின் மீது ஊறி தீ வைத்த அலி, ரோசிடாவின் செல்போன், டூவீலர் போன்றவற்றை எடுத்துச் சென்று விற்றுவிட்டார்.

அதனைத் தொடர்ந்து விடுதி ஒன்றில் பதுங்கி இருந்த அலியை போலிசார் கைது செய்தனர். ரோசிடாவைக் கொலை செய்தது நிரூபிக்கப்பட்டால் அலிக்கு மரண தண்டனை அல்லது 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்கிறார்கள்.

TBalamurukan

 

Source: AsianetTamil

Author Image
Kundralan M