பொருளாதார வீழ்ச்சியை மறைக்க வானளவு அளந்து விட்டிருக்கிறார் நிர்மலா சீதாராமன்: சீமான்

பொருளாதார வீழ்ச்சியை மறைக்க வானளவு அளந்து விட்டிருக்கிறார் நிர்மலா சீதாராமன்: சீமான்

சென்னை: மத்திய பட்ஜெட்டில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை மறைக்க வானளவு அளந்து விட்டிருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் குறித்து சீமான் தெரிவித்துள்ள கருத்து:

மிக நீண்ட மணிநேரம் வாசிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை என்பதைத் தாண்டி, வேறேதும் இல்லை வியந்து சொல்வதற்கு!

நாடு அடைந்திருக்கும் வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியை மறைக்க வானளவு அளந்து விட்டிருக்கிறார் அம்மையார் நிர்மலா சீதாராமன்.

வழமை போல, தனியார் மயத்திற்கு சந்தை விரித்து இந்தியாவை மொத்தமாக ஏலம்விட எத்தனிக்கும் நிதிநிலை அறிக்கை.

இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

மிக நீண்ட மணிநேரம் வாசிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை என்பதைத் தாண்டி, வேறேதும் இல்லை வியந்து சொல்வதற்கு!

நாடு அடைந்திருக்கும் வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியை மறைக்க வானளவு அளந்து விட்டிருக்கிறார் அம்மையார் நிர்மலா சீதாராமன்.

(1/2)

— சீமான் (@SeemanOfficial)

February 1, 2020

Source: OneIndia

Author Image
vikram