கொரோனா வைரஸால் சீனாவுக்கு வெளியே முதல் பலி.. பிலிப்பைன்ஸில் முதல் உயிரிழப்பு

கொரோனா வைரஸால் சீனாவுக்கு வெளியே முதல் பலி.. பிலிப்பைன்ஸில் முதல் உயிரிழப்பு

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலால் முதல் உயரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவுக்கு வெளியே முதல் பலி நிகழ்ந்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300 ஐ தாண்டி உள்ளது.

பிலிப்பைன்ஸில் 44 வயதான ஒருவர் கொரோனா வைரஸால் இறந்துவிட்டார் என்று சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர், இது சீனாவிற்கு வெளியே அறியப்பட்ட முதல் மரணமாகும்.

கொரோனா வைரஸின் மையமான சீனாவின் வுஹானில் வசித்து வந்த இந்த நபர், சனிக்கிழமையன்று இறந்தார். பிலிப்னைஸ் அதிகாரிகள் முதலில் இதை “கடுமையான நிமோனியா” என்று அழைத்தனர். பின்னர் கொரோனா வைரஸ் தாக்குதல் தான் என்று அறிவித்துள்ளனர்.

“இது சீனாவிற்கு வெளியே 2019-nCoV உடைய ஒருவரின் முதல் மரணம்” என்று பிலிப்பைன்ஸில் உள்ள உலக சுகாதார அமைப்பின் அலுவலகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பிலிப்பைன்ஸ் சுகாதார துறை செயலாளர் பிரான்சிஸ்கோ டியூக் கூறுகையில், “ஜனவரி 21 ஆம் தேதி 38 வயதான ஒரு பெண்ணுடன் கொரானா வைரஸலால் பாதிக்கப்பட்ட நபர் சீனாவின் வுஹானில் இருந்து நாட்டிற்கு வந்தார். அவரது கடைசி சில நாட்களில், நிலையானவராக இருந்தார், அத்துடன் முன்னேற்றத்தின் அறிகுறிகளுடன் இருந்தார். இருப்பினும் நோயாளியின் நிலை அவரது கடைசி 24 மணி நேரத்திற்குள் மோசமடைந்தது, இதன் விளைவாக அவரது மறைவு ஏற்பட்டது “என்றார்.

imageபொருளாதார வீழ்ச்சியை மறைக்க வானளவு அளந்து விட்டிருக்கிறார் நிர்மலா சீதாராமன்: சீமான்

அண்மையில் சீனாவுக்கு சென்ற வெளிநாட்டினரை தற்காலிகமாகத் தடுப்பதில் ஆஸ்திரேலியாவைத்தொடர்ந்து அந்த பட்டியலில் அமெரிக்காவும் இணைந்தது. வியட்நாம் சீனாவிலிருந்து மற்றும் கிட்டத்தட்ட அனைத்து விமானங்களையும் தடை செய்துள்ளது.

Source: OneIndia

Author Image
vikram