பச்சை பச்சையாக பேசி.. “தைரியம் இருந்தா என்னை தூக்கி வைங்க”.. கோர்ட் வாசலில்.. தாய் அட்டகாசம்!

பச்சை பச்சையாக பேசி.. “தைரியம் இருந்தா என்னை தூக்கி வைங்க”.. கோர்ட் வாசலில்.. தாய் அட்டகாசம்!

சென்னை: பச்சை பச்சையாக பேச ஆரம்பித்தார் அத்ந பெண்.. சிறுமி, சிறுமியின் தாய், கோர்ட், போலீஸ், மீடியா, என ஒருத்தரையும் விடவில்லை.. “தைரியம் இருந்தா, என்னை தூக்கி உள்ளே வைங்க பார்ப்போம்” என்று அயனாவரம் சிறுமி குற்றவாளிகளில், ஒருவரது தாய் கோர்ட் வாசலில் ரகளை செய்துள்ளார்.

தமிழக மக்களால் இன்னமும் மறக்க முடியாத, நினைத்தாலே நெஞ்சியில் ஈட்டியால் குத்தக்கூடிய சம்பவம் என்றால் அது அயனாவரம் சிறுமியின் கொடூரம்தான்.. வாய் பேச முடியாத.. காது கேளாத சிறுமி.. வயசு வெறும் 11தான்!

கடந்த 2018, ஜூன் மாதம் இந்த சம்பவம் வெளியே வந்தது.. லிப்ட் ஆபரேட்டர் முதல் அந்த அப்பார்ட்மென்ட்டில் வேலை பார்த்த வாட்ச்மேன், தண்ணீர் கேன் போடுபவர், லிப்ட் ஆப்ரேட்டர், வீட்டு வேலை செய்பவர் என 25வயது முதல் 66 வயது வரை உள்ள மொத்தம் 17 பேர் அந்த பெண்ணை நாசம் செய்தனர்.

imageபொண்டாட்டி தலையை அறுத்து.. 1.5 கிமீ தூரம் ஊர்வலம் போன கணவர்.. இதில் தேசிய கீதம் வேற.. அலறிய கிராமம்!

தண்டனை

மொட்டைமாடி, லிப்ட், டாய்லேட், ஜிம் போன்ற இடங்களில் யாருமில்லாத நேரத்தில் மயக்க ஊசி போட்டும், போதை ஊசி போட்டும் சிறுமியை சின்னாபின்னமாக்கியதோடு.. ஆபாசமாக தனது செல்போனில் படம் பிடித்து நினைத்தபோதெல்லாம் வீடியோவை காண்பித்து சீரழித்தனர். இதையெல்லாம் கேட்டு, தமிழக மக்களுக்கு வயிற்றில் நெருப்பை அள்ளி கொட்டியது போல இருந்தது. ஆனால் இவ்வளவு நடந்தும், ஒரு குற்றவாளியின் தாயார் நேற்று கோர்ட்டில் மகனுக்கு தண்டனை என்றதும் குதி குதி என்று குதித்து ஆவேச முழக்கமிட்டுள்ளார்.

உத்தரவு

குற்றவாளிகளில் 17 பேரில் ஒருவர் வழக்கு விசாரணையின்போதே இறந்துவிட்டார்.. தோட்டக்காரர் குணசேகரன் தரப்பில் போதுமான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்பதால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.. மற்ற 15 பேரும் குற்றவாளிகள் என்று கோர்ட் உத்தரவிட்டுவிட்டது.. இதற்கான தண்டனை விவரத்தையும் பிப்ரவரி 3-க்கு ஒத்தி வைத்துள்ளது.

ஆவேசம்

இந்நிலையில், நேற்று தீர்ப்பு வெளியாகும் என்பதால், குற்றம் சுமத்தப்பட்டவர்களின் உறவினர்கள் சோகத்தோடு கோர்ட் வளாக வாசலில் காத்திருந்தனர்… குற்றவாளிகள் என்று சொன்னதுமே அந்த பெண்கள் கதறி அழுதனர். அதில் ஒரு பெண் ஆவேசமாக கத்த ஆரம்பித்துவிட்டார்.. “என் பையன் அந்த அபார்ட்மென்ட்டில் சேர்ந்து 2 மாசம்தான் ஆகுது.. ஒரு மாச சம்பளம்தான் வாங்கினான்.. அதுக்குள்ள ஜெயில்ல தூக்கி வெச்சிட்டாங்க.. என் மகனுக்கு நீதி கிடைக்க மனித உரிமை ஆணையத்துக்கு போக போகிறேன்” என்றார்.

கெட்ட கெட்ட வார்த்தைகள்

இவ்வளவு பேசிய அந்த தாய் பாசத்துக்காக பேசியிருந்தால் கூட பரவாயில்லை.. அந்த சிறுமியை ஆபாசமாக பேசினார்.. கெட்ட கெட்ட வார்த்தைகளில் கடுமையாக விமர்சித்தார்.. ஒரு கட்டத்தில் அந்த சிறுமியின் அம்மாவை திட்ட ஆரம்பித்தார்.. பிறகு அப்படியே தீர்ப்பு வழங்கிய கோர்ட், போலீசையும், மீடியாவையும் தரக்குறைவாக பேசினார்.. உச்சக்கட்டமாக சிறுமியின் குடும்பத்துக்கு சாபமும் விடுத்தார்.. ஆபாச வாரத்தைகளால் திட்டி தீர்த்த அந்த பெண் “என்னை தூக்கி ஜெயில்ல வைங்க பார்ப்போம்” என்று சவார் விடுத்தார்.

கோரிக்கை

70 வயது கிழம் வரை அந்த பிஞ்சுவை நாசம் செய்துள்ளது என்ற எண்ணமே இல்லாமல்.. இது அத்தனைக்கும் சாட்சி நிரூபிக்கப்பட்டுள்ளது என்றுகூட தெரியாமல் இந்த பெண் பேயாட்டம் ஆடியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுற்றி நின்றவர்கள் எல்லோருமே இதை பார்த்து அதிர்ந்தனர்.. இந்த பெண்ணையும் தூக்கி உள்ளே வைங்க என்ற கோரிக்கையும் எழ ஆரம்பித்துள்ளது.

இப்போதுதான் தெரிகிறது.. இந்தம்மாவின் மகன் ஏன் ஜெயிலில் உள்ளார் என்று.. “நல்லவர் ஆவதும்.. தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே”!!!

Source: OneIndia

Author Image
vikram