சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்- உச்சநீதிமன்றத்தில் நாளை முதல் விசாரணை

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்- உச்சநீதிமன்றத்தில் நாளை முதல் விசாரணை

டெல்லி: சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் நாளை முதல் விசாரணை தொடங்குகிறது.

சபரிமலை தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையில் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் அமைக்கப்பட்டுள்ளது. சீராய்வு மனுக்களை இந்த அரசியல் சாசன பெஞ்ச் நாளை முதல் விசாரிக்க உள்ளது.

இதர வழிபாட்டுத் தலங்களில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுக்கள் மீதும் நாளை முதல் விசாரணை நடைபெறும். இம்மனுக்கள் மீது நாளை முதல் நாள்தோறும் விசாரணை நடைபெறும்.

மனுதாரர்கள் சார்பாக ஒரு மூத்த வழக்கறிஞர் மட்டுமே வாதிட அனுமதிக்கப்படும் என்று தலைமை நீதிபதி போப்டே ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: OneIndia

Author Image
vikram