ஏதோ பிரச்சனை.. தெர்மல் சோதனையில் சிக்கிய 6 பேர்.. சீனாவிலிருந்து இந்தியா திரும்ப அனுமதி மறுப்பு!

ஏதோ பிரச்சனை.. தெர்மல் சோதனையில் சிக்கிய 6 பேர்.. சீனாவிலிருந்து இந்தியா திரும்ப அனுமதி மறுப்பு!

டெல்லி: இன்று அதிகாலை சீனாவில் இருந்து இந்தியா புறப்பட்ட 329 இந்தியர்களில் 6 பேர் மட்டும் தெர்மல் சோதனையில் தோல்வி அடைந்ததால் இந்தியா அழைத்து வரப்படவில்லை.

சீனாவில் வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. நேற்று சீனாவின் வுஹன் நகரத்தில் இருந்து 324 இந்தியர்கள் இன்று நாடு திரும்பி உள்ளனர். இவர்கள் சிறப்பு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர்.

தற்போது அடுத்த கட்டமாக 323 இந்தியர்கள் சீனாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். சீனாவின்வுஹன் நகரத்திற்கு ஏர்இந்தியா விமானம் இதற்காக அனுப்பப்பட்டது. இன்று காலை அந்த போயிங் 747 ஜம்போ ஜெட் விமானம் இந்தியா வந்தது.

image800 பேரை தேடி பிடியுங்கள்.. கொரோனாவிற்கு எதிராக ‘காண்டாக்ட் டிரேஸ்’ முறை.. கேரளா எடுத்த பழைய ஆயுதம்

எத்தனை பேர்

முதலில் 329 மக்கள் இந்தியா கொண்டு வரப்படுவதாக இருந்தது. இவர்கள் எல்லோருக்கும் வுஹன் விமான நிலையத்தில் எல்லோருக்கும் தெர்மல் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை மூலம் இதயத்தில் ஏற்பட்டு இருக்கும் வெப்ப மாறுபாடுகள் கண்டுபிக்கப்படும். உலகம் முழுக்க பல்வேறு விமான நிலையங்களில் இந்த தெர்மல் சோதனை வைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை மூலம்தான் சீனாவில் இருந்து பிற நாட்டிற்கு செல்லும் பயணிகள் கண்காணிக்கப்படுகிறார்கள்.

இந்தியா பெண்கள்

இந்த நிலையில் சீனாவில் இருந்து இன்று இந்தியா திரும்பியவர்களுக்கும் வுஹன் நகரத்தில் சோதனை செய்யப்பட்டது. அப்போது 329 பேரில் 6 பேருக்கு உடலில் வெப்பநிலை மாறுபாடு இருந்தது. அவர்களின் இதயம் அருகே வெப்பநிலை மாறுபாடு இருந்தது. இதனால் அந்த 6 பேர் மட்டும் விமானத்தில் அனுமதிக்கப்படவில்லை. தெர்மல் சோதனையில் இவர்களின் இதயத்திற்கு அருகே அசாதாரணமான சிவப்பு நிற புள்ளிகள் தெரிந்தது. கொரோனா தாக்குதல் இருப்பவர்களுக்கு பொதுவாக இப்படித்தான் தெரியும்.

இரண்டு பேர்

இதில் இரண்டு பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர்களின் உறவினர்கள் சீனாவில் தங்க அனுமதிக்கப்படவில்லை. இவர்கள் 6 பேர் மட்டுமே விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இவர்கள் 6 பேருக்கு சோதனை செய்யப்படும். சோதனைக்கு பின்பே இவர்களை இந்தியா அனுப்புவதா கூடாதா என்று முடிவு செய்யப்படும். இவர்களுக்கு நோய் தாக்குதல் இருந்தால் கண்டிப்பாக இந்தியா அனுப்ப்பட மாட்டார்கள்.

டெல்லிக்கு சென்றனர்

அதன்பின் டெல்லிக்கு 323 பேர் வந்தனர். இவர்களுடன் மாலத்தீவை சேர்ந்த 7 பேர் வந்தனர். இவர்கள் எல்லோருக்கும் டெல்லியிலும் மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் தெர்மல் சோதனை செய்யப்பட்டது. அங்கு யாருக்கும் பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இவர்கள் எல்லோரும் தற்போது திபெத் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

Source: OneIndia

Author Image
vikram