பீச்சில் பிணங்கள்.. வாயில் நுரை தள்ளிய நிலையில்.. கள்ளக்காதல் ஜோடி மீட்பு.. திருச்செந்தூரில்!

பீச்சில் பிணங்கள்.. வாயில் நுரை தள்ளிய நிலையில்.. கள்ளக்காதல் ஜோடி மீட்பு.. திருச்செந்தூரில்!

திருச்செந்தூர்: வாயில் நுரை தள்ளிய நிலையில், ஜோடி ஒன்று விஷமருந்தி பீச்சில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.. தற்கொலை செய்து கொண்டவர்கள் புனிதமான காதலர்கள் இல்லை.. இது கள்ளக்காதல் ஜோடி!

திருச்செந்தூர் கோவில் பீச்சில் 2 பேர் விழுந்து கிடந்தனர்.. அந்த பக்கமாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து அருகில் ஓடிப்போய் பார்த்தபோது, அது ஒரு ஆணும், பெண்ணும் என்று தெரியவந்தது.. இருவருமே வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தனர்.

அவர்களுக்கு பக்கத்திலேயே விஷ பாட்டில் விழுந்து கிடந்தது. உடனடியாக கோயில் போலீசுக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்தனர். சடலங்களை திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரிணை நடத்தினர்.

இறந்தவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அம்மன் கோவில்பட்டி நடுத்தெருவை சேர்ந்த கணேசமுத்து, வயது 45.. அதே சிவகாசி சாமிபுரம் காலனியை சேர்ந்த ஜெயலட்சுமி.. வயது 35!

இருவருமே கல்யாணம் ஆனவர்கள்.. கணேசமுத்துக்கு கல்யாணமாகி 17 வயதில் ஒரு மகன், 15 வயதில் ஒரு பெண் இருக்கிறார்கள்.. அதேபோல ஜெயலட்சுமியின் கணவன் பெயர் லட்சுமணன்.. 13 வயதில் ஒரு மகள், 7 வயதில் ஒரு மகன் உள்ளனர்.

கணேசமுத்துவும், ஜெயலட்சுமியும் குக்-ஆக உள்ளனர்.. அதாவது சமையல் வேலை பார்ப்பவர்கள்.. சமைக்கும்போதே லவ் பத்தி கொண்டுள்ளது… ஒரே இடத்தில் வேலை செய்ததால், நெருக்கம் அதிகமானது.. இவர்களது சமாச்சாரம் இரு வீட்டுக்கும் தெரிந்தும் கண்டித்துள்ளனர்.. தகராறும் செய்துள்ளனர்.. ஆனாலும் கள்ளக்காதலை இவர்கள் விடவில்லை.

imageபச்சை பச்சையாக பேசி.. “தைரியம் இருந்தா என்னை தூக்கி வைங்க”.. கோர்ட் வாசலில்.. தாய் அட்டகாசம்!

2 நாளைக்கு முன்புகூட, கணேசமுத்துவை அவர் வீட்டில் கண்டித்துள்ளனர்.. அவருடைய அண்ணனே மிக மோசமான வார்த்தைகளால் திட்டியதுடன், அறிவுரையும் கூறியுள்ளார்.. இதனால் கணேசமுத்து மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.. ஜெயலட்சுமியையும் சந்தித்து தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கேட்க.. அவரும் சரி என்று சொல்லி உள்ளார்.

அதன்படி இரவு நேரம் கணேசமுத்து, ஜெயலட்சுமி இருவரும் திருச்செந்தூருக்கு கிளம்பி வந்தனர்.. நடுராத்திரி திருச்செந்தூர் கோவில் பீச்சில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.. இந்த தகவல்கள் அனைத்தும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source: OneIndia

Author Image
vikram