அதிமுக எம்பி சசிகலா புஷ்பா இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்

அதிமுக எம்பி சசிகலா புஷ்பா இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்

டெல்லி: அதிமுகவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா இன்று மதியம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதா என்னை அடித்தார் என மாநிலங்களவையிலேயே பெரும் குண்டை தூக்கி அதிர வைத்தவர் அதிமுக ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா. தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் எம்பியாகவும் பொறுப்பு வகித்து உள்ளார்.

இவர் அண்மைக் காலமாக பாஜகவுக்கு ஆதரவாக பேசி வருகிறார். தமிழகத்தில் மோடியின் ஆட்சி அமைந்தால்தான் நல்லாட்சி பிறக்கும்’ என்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் இன்று மதியம் 2.30 மணிக்கு டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிடோர் முன்னிலையில் பாஜகவில் சசிகலா புஷ்பா இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

imageகலவரத்துக்கு காரணமே அதிமுகவும், பாமகவும் தான்… ஸ்டாலின் குற்றச்சாட்டு

இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அதிமுகவில் இருந்து விலகி நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்தார்.அதைத்தொடர்ந்து சசிகலா புஷ்பாவும் இப்போது பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

Source: OneIndia

Author Image
vikram