பாரதிராஜா இயக்கத்தில் ரஜினி நடித்த படம் ஓடியது, ஆனால் பாஜக இயக்கத்தில் அவர் நடித்துக்கொண்டிருக்கும் படம் ஓடாது. தமிம் அன்சாரி கடும்தாக்கு.

பாரதிராஜா இயக்கத்தில் ரஜினி நடித்த படம் ஓடியது, ஆனால் பாஜக இயக்கத்தில் அவர் நடித்துக்கொண்டிருக்கும் படம் ஓடாது. தமிம் அன்சாரி கடும்தாக்கு.

 

பாரதிராஜா இயக்கத்தில் நடித்த ரஜினிகாந்த், இன்று பாரதிய ஜனதா கட்சி இயக்கத்தில் நடித்துக் கொண்டிருப்பதாக மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி ட்விட்டரிலும் சாடியுள்ளார். 

சென்னை மண்ணடியில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசியஅனசாரி..” பாஜகவுக்கு ரஜினிகாந்த் உடன்பட்டு செல்வதால் ஐடி நெருக்கடிகளில் இருந்து அவர் காப்பாற்றப்படுவதாகவும், பாஜகவுக்கு எதிராக கருத்து கூறுவதால் நடிகர் விஜய் ஐடி அதிகாரிகள் மூலம் குறிவைக்கப்பட்டு நெருக்கடிகள் தரப்படுவதாகவும் தெரிவித்தார். விஜய்க்கு கொடுக்கும் நெருக்கடிகளை தமிழக மக்கள் வேடிக்கை பார்க்கமாட்டார்கள் என்று பேசியிருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் குடியுரிமை சட்டம் தொடர்பாக சரியான புரிதல் இல்லாமல் கருத்து தெரிவித்திருக்கிறார். இந்த சட்டத்தை பற்றி ரஜினிகாந்த் இன்னும் முழுமையாக அறிந்துகொள்ளவில்லை . பாரதிராஜா இயக்கத்தில் ரஜினி நடித்த படம் ஓடியது, ஆனால் பாஜக இயக்கத்தில் அவர் நடித்துக்கொண்டிருக்கும் படம் ஓடாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் . தொடக்கம் முதலே இந்த விவகாரத்தில் தவறான கருத்தை ரஜினி பதிவு செய்து வருவதாக விமர்சித்தார்.


  இளம் நடிகர் சித்தார்த் உள்ளிட்டோருக்கு இருக்கும் அரசியல் புரிதல் கூட சூப்பர் ஸ்டார் என சொல்லிக்கொள்ளும் ரஜினிக்கு இல்லை என்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.  குடியுரிமை சட்டத்தை திரும்பபெறும் வரை மனிதநேய ஜனநாயக கட்சி தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டே இருக்கும் என ஆவேசம் காட்டினார். இதனிடையே ஆர்ப்பாட்டத்தில் மண்ணடி பகுதியில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். 

TBalamurukan

Source: AsianetTamil

Author Image
Kundralan M