இன்று டெல்லி சட்டமன்றத் தேர்தல்..!! வாக்கு பதிவு தொடங்கியது. டெல்லியை கைப்பற்றப் போவது யார்..?

இன்று டெல்லி சட்டமன்றத் தேர்தல்..!! வாக்கு பதிவு தொடங்கியது. டெல்லியை கைப்பற்றப் போவது யார்..?

டெல்லி சட்டசபைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இதையடுத்து, 70 தொகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது, 70 உறுப்பினர்கள் அடங்கிய சட்டசபைக்கு, இன்று தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில், 672 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 1.47 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். இதில், 2.32 லட்சத்திற்கும் அதிகமானோர், 18 – 19 வயதுக்குட்பட்டவர்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், நேற்று முன்தினம் மாலை தீவிர பிரசாரம் நடைபெற்று ஓய்ந்தது. ஆம் ஆத்மி காங்கிரஸ் பாஜக போன்ற கட்சிகளுக்குகிடையே தான் போட்டியே. இந்த சூழ்நிலையில் இன்று தேர்தல் நடக்க உள்ளது. 70 தொகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டம் நடந்து வரும் ஷாஹீன்பாக் பகுதியில், பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.’ஆட்சியை தக்க வைப்போம்’ என, ஆம் ஆத்மி கட்சியும், ‘இம்முறை ஆட்சியை கைப்பற்றுவோம்’ என, பா.ஜ.,வும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.ஓட்டு எண்ணிக்கை, 11ம் தேதி நடக்கும்.. அன்று மதியமே அனைத்து முடிவுகளும் வெளியாகி, டில்லியில் ஆட்சியை பிடிப்பது யார்..? எனத் தெரிந்துவிடும்.

TBalamurukan

Source: AsianetTamil

Author Image
Kundralan M