சிக்கினார் புரோக்கர் ஜெயக்குமார்… திருமண விழாவில் கமெண்ட் செய்த மு.க.ஸ்டாலின்..!

சிக்கினார் புரோக்கர் ஜெயக்குமார்… திருமண விழாவில் கமெண்ட் செய்த மு.க.ஸ்டாலின்..!

டிஎன்பிஎஸ்சியில் நடந்த முறைகேட்டில் தேடப்பட்டு வந்த முக்கிய புரோக்கர் ஜெயக்குமார் சிக்கிவிட்டார் என திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியது அங்கிருந்தவர்களை சிரிப்பலையை ஏற்படுத்தியது. 

சென்னை வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் இல்லத் மணவிழாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். அந்த விழாவில் அவர் பேசும்போது, டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டைப் பற்றிய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அதை பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்று சொல்லக்கூடாது. பப்ளிக் சர்வீஸ் கரப்ஷன் என்றுதான் சொல்ல வேண்டும். 

புரோக்கர் ஜெயகுமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தானாக முன்வந்து ஆஜராக வேண்டிய அவசியம் என்ன? உண்மை நிலவரத்தை வெளியில் கொண்டுவர வேண்டும் என்பதற்காக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். முறைகேடுகள் அனைத்தும் மேலிட உத்தரவுடன் நடந்திருக்கிறது என்று சந்தேகப்படுகிறோம். அந்தத் துறையின் அமைச்சராக இருக்கும் ஜெயக்குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

Source: AsianetTamil

Author Image
Kundralan M