உங்களை நினைத்து பெருமை படுகிறேன் அப்பா! உணர்ச்சிவசம் போங்க ராதிகா மகள் ரேயான் போட்ட ட்விட்!

உங்களை நினைத்து பெருமை படுகிறேன் அப்பா! உணர்ச்சிவசம் போங்க ராதிகா மகள் ரேயான் போட்ட ட்விட்!

90 களின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த நடிகர் சரத்குமார். சமீப காலமாக,  ஹீரோவாக நடித்த சில படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்ததால், இப்போது பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார்.  

இந்நிலையில்,  மல்டிஸ்டார் படமாக உருவாகியுள்ள ‘வானம் கொட்டட்டும்’ படத்தில், சூரிய வம்சம் படத்திற்கு பின், தன்னுடைய மனைவி ராதிகாவுடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்த படத்தை பார்த்த ராதிகாவின் மகள் ரேயான் தன்னுடைய தந்தைக்கு உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது அப்பா என உருக்கமான செய்தியை வெளியிட்டுள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில்…  “வெற்றி 10 மடங்கு  வீழ்ந்தாலும், 11 வது முறையாக நீங்கள் திரும்பி வருவதைக் காணலாம். தோல்வி என்பது வீழ்ச்சியைப் பற்றியது அல்ல, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பற்றியதும் அல்ல. 

இந்த படத்தில் உங்களை பார்ப்பது என்னை ஒருவித உணர்ச்சிவசப்படுத்தியது – நான் உங்களை கட்டிப்பிடித்து ஐ லவ் யூ என்று சொல்ல விரும்பினேன். நான் உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். என உணர்ச்சிவசமான ட்விட்டை போட்டுள்ளார்.
 

I’m sooo proud of you, Appa! ❤️ @realsarathkumar pic.twitter.com/XQrcnTNF1B

— Rayane Mithun (@rayane_mithun) February 7, 2020

Source: AsianetTamil

Author Image
Kundralan M