கருணாநிதி தீட்டிய கூர்வாள்..!! எடப்பாடியை கதற வைக்கும் ஜாபர்சேட்..!!!

 

 ‘கிணறு வெட்ட பூதம்’ கிளம்பிய கதையாக நாளுக்கு நாள் டிஎன்பிஎஸ்சிமுறைகேடு விவகாரம் ஒவ்வாரு நாளும் ஒவ்வொரு பூதமாக
கிளம்பிக்கொண்டிருக்கிறது. டிஎன்பிஎஸ்சியில் முறைகேடு கேள்விதாள் அவுட்எல்லாம் இன்றைக்கு நடக்கும் விசயமல்ல. இது காலம்காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த 2000ம் ஆண்டு குரூப்1 தேர்வு 95 பணியிடங்களுக்குதேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாகச் சொல்லிஇத்தேர்வு எழுதியவர்களில் ஒருவரான மாதவன் என்பவர் சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதற்குள் 95பேருக்கும்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு அவர்அவர்களுக்கான துறைகளில் வேலை பார்த்துவருகிறார்கள். 2009ம் ஆண்டு இந்த வழக்கின் தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றநீதிபதிகளால் எழுதப்பட்டது.’ அதில் குரூப் 1 தேர்வில் முறைகேடுநடைபெற்றிருப்பதற்கான ஆதாரங்கள் நிருபிக்கப்பட்டிருக்கிறது என்றுநீதியரசர்கள் தீர்ப்பு எழுதினார்கள்.

 

தமிழக அரசின் சார்பிலும் குரூப்1 சர்விஸ்சில் தேர்வு செய்யப்பட்ட 95பேரும் உச்சநீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய எதிர்ப்பை
எதிர்த்து மேல்முறையிடு செய்தார்கள். அங்கே சிங்கிள் பென்ச், டபுள்பென்ச் இரண்டிலும் இரண்டு விதமான தீர்ப்பு வெளியானது. அதில் தமிழக அரசுமேல்முறையிடு செய்த மனு தள்ளுபடி செய்யது உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.முறைகேடான தேர்வு நடைபெற்றதில் வெற்றி பெற்றவர்கள் தமிழக அரசு பணியில்உயர்பதவிகளில் பணியாற்றுவதால் அவர்களை ஒன்றும் பண்ண முடியாமல்திணறிக்கொண்டிருக்கிறது தமிழக அரசு.

2011ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி சேர்மனாக இருந்த செல்லமுத்து அதன்உறுப்பினர்களான ராஜா உள்ளிட்டவர்கள் வீடுகளில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தினார்கள். இந்த சம்பவம் அப்போதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘நாங்கள் எல்லாம் கவர்னரால்நியமிக்கப்பட்டவர்கள் எங்கள் வீடுகளில் ரெய்டு நடத்தக்கூடிய அதிகாரம்தமிழக அரசிற்கு கிடையாது என்று வழக்கு தொடர்ந்தார்கள் . அந்த வழக்குஇன்னும் நிலுவையில் தான் இருக்கிறது.ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது டிஎன்பிஎஸ்சிக்கு ஆறு உறுப்பினர்கள்
நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் தகுதியில்லாதவர்கள் என்று பாமக,திமுக உள்ளிட்ட கட்சிகள் கவர்;னருக்கும் புகார் அனுப்பியதோடு
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். அதனடிப்படையில ;அந்த ஆறுபேரும் பதவியும் மண்ணைக்கவ்வினார்கள்.. 2017ம் ஆண்டு நடைபெற்ற குருப்1சர்வீஸ் தேர்விற்கான கேள்வி தாள் வெளியானது அதில் சம்மந்;தப்பட்டவர்கள்ஏழு பேர் கைதானார்கள்.

2020ம் ஆண்டு குரூப்4 தேர்வில்  நடைபெற்ற முறைகேடு பூதாகரமாககிளம்பியிருக்கிறது.  சிவகங்கை அருகேயுள்ள பெரிய கண்ணணூரைச் சேர்ந்த
போலீஸ்காரர் சித்தாண்டி ஜெயக்குமார் ஆகியோர் கைவரிசையில் இராமநாதபுரம்மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்கள் 99 பேர்களில் ஒருவர் மாநில அளவில்முதலிடம் பெற்றார். ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் நூறுரேங்க் பட்டியில் இடம் பிடித்திருந்தது கூடுதல் சந்தேகத்தைஏற்படுத்தியிருக்கிறது. ‘திருடத் தெரியாதவன் தலையாரி’ வீட்டில் திருடினகதையாக டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் கதைஅமைந்திருக்கிறது. இந்த கொள்ளைக்கூட்டத்தின் தலைவன் இன்னும் மாட்டவில்லை.மீன் குஞ்சுகள் தான் ட்டியிருக்கிறது பெரிய மீன்கள் மாட்டவில்லை என்றுதிமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.இது ஜாபர்சேட்க்கு கூடுதாகவெறியை ஏற்படுத்தியது.
காலம்காலமாக டிஎன்பிஎஸ்சியில் ஊழல் நடைபெற்றுக்கொண்டுதான்  இருக்கிறது.அவ்வப்போது இந்த ஊழல் முறைகேடு தீயாய் கிளம்பி அமர்வது வழக்கமானதாகஇருக்கும். ஆனால் இந்த முறை நடைபெற்ற ஊழல் புயலாய் பூதமாய் கிளம்பமுக்கிய காரணமே காவல்துறை டிஜிபிகளாக இருக்கும் ஜாபர்சேட், திரிபாதிஇவர்களுக்குள் இருக்கும் மோதல்கள் தான் காரணம் என்கிறார்கள் விபரம்அறிந்த ஐபிஎஸ் அதிகாரிகள். அப்படி என்ன மோதல்கள்? டிஎன்பிஎஸ்சி விவகாரம்பூதமாக வெடிக்க என்ன காரணம் என்றெல்லாம் அலச ஆரம்பித்தோம்.சிபிசிஐடி டிஜிபியாக இருக்கும் ஜாபர்சேட். திமுக ஆட்சியில் கலைஞருக்குநம்பிக்கைக்குரிய நபராக வலம் வந்தவர். அரசியல் கட்சி தலைவர்கள்பேச்சுக்கள் எல்லாம் ஓட்டுகேட்பதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்ததுநினைவிருக்கலாம். திமுகவின் விசுவாசியாக இவர் முத்திரை குத்தப்பட்டதால்தான் ஜெயலலிதா முதல்வராக வந்ததும் மண்டபம் முகாமிற்கு மாற்றப்பட்டார்.ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை ஜாபர்சேட்டால் காவல்துறைக்குள் நல்லபோஸ்டிங்க்கு வரமுடியாமல் டம்மியான இடங்களிலேயே வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் எடப்பாடி முதல்வராக வந்ததும் ஏதோ ஒரு வழியில்சிபிசிஐடிக்கு வந்து விட்டார். ஆனால் அவருக்கே தெரியாது…டிஎன்பிஎஸ்சியில்இப்படியொரு ஊழல் பூதம் கிளம்பும் என்று. என்ன தான் தமிழக காவல்துறைக்குடிஜிபியாக திரிபாதி இருந்தாலும். அதிமுக அரசிற்கு நம்பிக்கைக்குரியவராகஇருந்தாலும் ‘ஜாபர் சேட்’ அடக்க முடியவில்லை. அதிமுக ஆட்சியில்டிஎன்பிஎஸ்சியில் வரலாறு காணாத அளவிற்கு முறைகேடு நடந்திருக்கிறது என்பதைநிருபிக்க வேண்டும் என்பதற்காகவும் அதிமுக அரசிற்கு கேட்ட பெயரை
ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் தன்னுடைய விசுவாசத்தை திமுகவிற்கு காட்டிவருகிறார் என்கிறார்கள்.

தமிழக அரசின் டிஜிபியாக திரிபாதி இருந்தாலும் ஜாபர்சேட்டை அடக்கிவைக்கமுடியவில்லை. டிஎன்பிஎஸ்சியில் நடைபெற்ற முறைகேட்டிற்கு யார் காரணம்எந்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஐபிஎஸ் ஈடுபட்டிருக்கிறார்கள். இதில் அமைச்சர்கள்யார் என்றெல்லாம்  ஆதாரத்தோடு ஆவணங்களை எடுத்து வைத்திருக்கிறார்ஜாபர்சேட். டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டிருக்கும் மூளை யார் என்றுகண்டு பிடித்து முற்றுப்புள்ளி வைக்க போகும் நேரத்தில் தான் ஜெயகுமார்சென்னை நீதிமன்றத்தில் ஆஜரானார். இ;ந்த முறைகேட்டில் இன்னொரு ஜெயக்குமார்
சிக்கிவிடக்கூடாது என்பதற்காக தான் இந்த சரண்டராம். இந்த நேரத்தில ;ஜாபர்சேட்டை பணிமாற்றம் செய்தால் அரசியல் ரீதியாகஎதிர்கட்சிகளின் கண்டத்திற்கும் பொதுமக்களின் கோபத்திற்கு ஆளாகிவிடுவோம்என்று திரிபாதியை முதல்வர் எடப்பாடி அடக்கி வாசிக்கும் படி சொல்லியிருக்கிறாராம்.

ஜாபர்சேட்டிற்கு வேண்டிய ஐபிஎஸ் அதிகாரிகள்முதல்வர் சொன்ன சில விசயத்தை  அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அதனால்
தான் அமைச்சர்கள் ஐஎஎஸ் அதிகாரிகள் பெயர்கள் இ;ன்னும் வெளியிடாமல்இருக்கிறார் ஜாபர் சேட். இந்த பூத விவகாரம் அடங்கிய பிறகு ஜாபர்சேட்மீண்டும் மண்டபம் முகாமிற்கு மாற்றப்படுவார். அதில் எந்த சந்தேகமும்இல்லை. என்கிறார்கள்.

டிஜிபி திரிபாதி எப்படியாவது ஜாபர்சேட்டை சிபிசிஐடி யில் இருந்துமாற்றியே தீரவேண்டும். இல்லையென்றால் அதிமுக அரசிற்கு கெட்ட பெயரை மக்கள்மத்தியில் கொண்டு சேர்த்துவிடுவார் ஜாபர்சேட். என்கிற மனக்குமுறலில்இருக்கிறாராம் திரிபாதி.டிஎன்பிஎஸ்சி முறைகேடு எப்படியெல்லாம் நடைபெற்றிருக்கிறது என்பதைகண்டுபிடித்து கொடுத்த பெருமை ஒருபக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம்திமுகவிற்கு விசுவாசத்தைக்காட்டி விட்டார் ஜாபர்சேட்.  எது எப்படியோஅதிமுக திமுக டிஜிபிக்களால் டிஎன்பிஎஸ்சி முறைகேடு வெட்டவெளிச்சத்திற்கு
வந்து விட்டது.

TBalamurukan

 

Source: AsianetTamil

Author Image
Kundralan M